நண்பர் ரஜினிக்கு பொருத்தமான விருது என கமல் வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருதிற்கு நண்பர் நடிகர் ரஜினிகாந்த் பொருத்தமானவர் என கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்துக்கு பலரும் சமூகவலைதளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறிவருகின்றனர். அந்த வகையில், உச்ச நடிகரும், ரஜினிக்கு நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100 சதவீதம் பொருத்தம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.</p>— Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1377487242407473152?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 1, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>