Por Trailer: “சத்தம் போட்டா தான் கேட்கும்ன்னா கத்துவோம்” - கவனம் ஈர்க்கும் போர் படத்தின் ட்ரெய்லர்!
கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம், ஜீவா நடிப்பில் வெளியான “டேவிட்:” படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பிஜேய் நம்பியார்.
நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் இணைந்து நடித்துள்ள “போர்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம், ஜீவா நடிப்பில் வெளியான “டேவிட்:” படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பிஜேய் நம்பியார். மலையாளத்தில் 2005 ஆம் ஆண்டே இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். இதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு அமேசன் ஓடிடி தளத்துக்காக “ஸ்வீட் காரம் காஃபி” என்ற வெப் சீரிஸை இயக்கினார்.
இதனிடையே பிஜேய் நம்பியார் தற்போது “போர்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இளம் நடிகர்களான அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். மேலும் டிஜே பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். மார்ச் 1 ஆம் தேதி போர் படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. டி சீரிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Battle lines are drawn and the stakes are higher than ever!
— T-Series (@TSeries) February 16, 2024
Brace yourself #Por is about to take over!🔥
Pick a side! ⚡️
Trailer out now: https://t.co/0rVNsEK22m#Por #PorTheFilm#tseries @AAFilmsIndia @harsh16dec @itsEhanBhat @nikifyinglife @TJBhanuOfficial @iam_arjundas… pic.twitter.com/ZhRCmlNBFs
இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ் இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக வருகிறார். இதில் காளிதாஸ் கல்லூரியிம் பிளேபாய் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர்களுக்கான மோதல் என்பது அர்ஜூன் தாஸ் காதலி மூலம் வெடிக்கிறது. இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக ட்ரெய்லர் காட்சிகளை பார்க்கும்போது தெரிகிறது.
போர் படத்தில் இடம் பெற்றுள்ள‘சத்தம் போட்டா தான் சில காதுகளுக்கு கேட்கும்ன்னா கத்தத் தான் செய்வோம்’ என்ற வசனங்களும் கவனம் ஈர்த்துள்ளது. இளம் வயதினரை கவரும் நோக்கில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள போர் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
முன்னதாக சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர், “போர் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வரவிருக்கிறது. தமிழில் நாங்கள் நடித்துள்ளோம். இப்படம் கல்லூரி மாணவர்களின் சேட்டைகளை கதைகளமாக கொண்டது. இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் காண வேண்டும்” என கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.