மேலும் அறிய

Kajal Aggarwal Birthday: பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே.... காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள்!

இன்று நடிகை காஜல் அகர்வால் தனது 38 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது திரைவாழ்க்கை ஒரு சுற்று வருவோம்

இன்று தனது 38 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகை காஜ அகர்வால்.

காஜல் அகர்வால்

1985 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி பிறந்தார் காஜல். 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் வழியாக நடிகையாக அறிமுகமானார் காஜல் அகர்வால். அதே ஆண்டு வெளியான சந்தாமாமா திரைப்படாம் இவருக்கு பரவலான கவனத்தை பெற்றுத் தந்தது. காஜல் அகர்வால் என்கிறப் பெயர் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் பிரலபானது என்றால் அது 2009 ஆம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த மகதீரா திரைப்படத்தின் வழியாகத்தான். தெலுங்கு திரையுலகில் இன்றுவரை அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது இந்தப் படம்.

தமிழில் அறிமுகம்

2008 ஆம் ஆண்டு வெளியான பழனி திரைப்படத்தில் வழியாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார் நடிகர் காஜல் அகர்வால்.  திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் காஜல் . 2011 ஆம் ஆண்டு வெளியான மகதீரா திரைப்படத்தின் ரீமேகான மாவீரன் திரைப்படம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை சம்பாரித்தார்.  

ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த துப்பாக்கி

தொடர்ச்சியாக தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வரத்தொடங்கிய காஜல் 2012 ஆம் வெளியான துப்பாக்கிப் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் விஜய் காஜல் ஆகிய இருவரின் கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர். ஜில்லா படமும் கமர்சியல் வெற்றி பெற்றது. துப்பாக்கிப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் வசூல் படைக்கும் நடிகையாக மாறினார் காஜல்.

சூர்யா , அஜித், அடுத்து கமல்

சூர்யாவுடன் இணைந்து மாற்றான், அஜித்துடன் இணைந்து விவேகம், தனுஷுடன் மாரி என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் திரையில் தோன்றிய காஜல் அகர்வால், ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக செம பிஸியாக இருந்து வந்தார். இவர்களைத் தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமலுடன்  இணைந்து நடிக்கிறார் காஜல் அகர்வால்.

சினிமாவை விட்டு விலகுகிறாரா

கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் காஜல்.  திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து சில படங்களில் நடித்தார் . காஜல் கவுதம் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நீல் என அந்த குழந்தைக்கு பெயரிட்டனர். தனது குழந்தைக்கு ஒரு நல்ல தாயாக இருக்க குழந்தையுடன் அதிக நேரம் செலவிட காஜல் தீர்மானித்ததாகவும் அதனால், சினிமாவை விட்டு முழுமையாக விலக அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

காஜல் 60

அதனை மறுக்கும் வகையில் தனது 60வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது பிறந்தநாளன்று வெளியிட இருக்கிறார் காஜல் அகர்வால். அவரது கரியரில் முக்கியமானப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Embed widget