Kacha Badam: 'துரோகம் பண்ணிட்டாங்க.. பிழைக்கவே வழியில்லாம கஷ்டப்பட்றேன்..' - வேதனையில் வாடும் கச்சா பாதாம் பிரபலம்..!
கச்சா பாதம் பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பூபன் பட்யகார் வறுமையில் வாடுவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக்கில் பிரபலமாகி வைரலான கச்சா பாதாம் பாடல் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். அந்தப் பாடலை பாடிய கலைஞர் பூபன் பட்யகார் தான் அன்றாடச் செலவுகளைச் ச்மாளிக்க தினசரி கூலிவேலைகள் செய்து பிழைப்பு நகர்த்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர தன்னுடைய பாடலின் காபிரைட் பிரச்னையால் தன்னால் எந்தப் பாடலையுமே வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் புலம்பி இருக்கிறார். தன்னுடைய பாடலை வேறு ஒருவர் காபிரைட் செய்து தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறிய அவர், வெளிநாடுகளில் பாட வாய்ப்பு வந்தாலும் இந்த சட்டச் சிக்கலால் தன்னால் அன்றாடம் பிழைக்கக் கூட வழியில்லாமல் இருப்பதாக அவ்ர் தெரிவித்தார். அவர் தனது உணவு விற்பனைக்காக பாடிய பாடல் கச்சா பாதாம் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரல் ’கச்சா பாதாம்’ பாடல் உருவானது எப்படி?
இந்தியாவில் அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான சம்பவங்கள் அல்லது பாடல்கள், நிகழ்வுகள் பிரபலமாவது வழக்கம். சமீபகாலமாக அவ்வாறு பிரபலமாகும் சம்பவங்களை டிக்டாக வாசிகள் தாங்களும் அதுபோன்று செய்து பிரபலமாக முயற்சிப்பதும், பின்னர் அது மீம்சாகவும், ட்ரோலாகவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயன்படுவது வழக்கமாகி வருகிறது.
View this post on Instagram
வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாம் விற்கும் வியாபாரி ஒருவர் பாதாமை விற்பதற்காக வித்தியாசமாக பாட்டு பாடி தனது பாதாமை விற்றுள்ளார். அவ்வாறு அவர் பாடிய கச்சாபாதம் என்ற பாடல் மிகவும் வைரலாகியது. சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங் வெளியாகி மாபெரும் வைரலானது. ஒரு வருடத்துக்கு முன்பு வெளியான இந்த பாடலை கிட்டத்தட்ட நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூ டியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர்.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே இந்த கச்சா பாதம் என்ற பாடல் இன்றளவும் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர்.
இதற்கிடையில்தான் புபென் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.