மேலும் அறிய

உயிருக்கு போராடும் ரசிகர்... வீடியோ காலில் வந்து அதிர்ச்சியளித்த நடிகர்!

முரளியின் செல்போனுக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்த அவருக்கு அவரது கண்களையே நம்ப முடியவில்லை. ஏனென்றால், அவருக்கு பிடித்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். வீடியோ காலில்...

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வந்த தனது ரசிகரின் கோரிக்கையை ஏற்று, அவரது கடைசி ஆசையை . நிறைவேற்றி வைத்துள்ளார். இது தொடர்பான சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ வை பார்த்து ஜூனியர் என்.டி.ஆரின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமாராவின் பேரனும், தெலுங்கு நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகனுமாகிய ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக திகழ்ந்து வருகிறார். இவரது சகோதரர்கள் பாலகிருஷ்ணா மற்றும் கல்யாண் ராம் ஆகியோரும் தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வருபவர்கள்.

பாகுபலி இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி மகன் ராம்சரன் தேஜுடன் இணைந்து நடித்து உள்ள ஆர்.ஆர்.ஆர். படம் வரும் ஜனவரி மாதம் 7-ம்தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. தற்போது பிரபல தெலுங்கில் தொலைக்காட்சியில் குரோர்பதி நிகழ்ச்சியின் தெலுங்கு வெர்சனான “யார் உங்களில் கோடீஸ்வரர்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம்,கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜோலு கிராமத்தை சேர்ந்த முரளி என்பவர் ஜூனியர் என்.டி.ஆரின் முரட்டு ரசிகராக இருந்து வந்தார். ஜூனியர் என்.டி.ஆரின் எல்லா படங்களையும் முதல் நாள் முதல் ஷோவை திரையரங்கில் கண்டுகளிப்பதுடன் படத்துக்கான பேனர் அடித்து வைப்பது போஸ்டர் அடிப்பது, ஜூனியர் என்.டி.ஆர். குறித்து அவரது படங்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் பிரோமோசன் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தார்.

பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துக் காத்திருந்தார் முரளி. ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பு பல முறை தள்ளிப்போனது. இதனால் ரிலீஸ் தேதியின் மாற்றப்பட்டு வந்தது. ஒரு வழியாக ஜனவரி 7 ஆம் தேதி ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனை அறிந்து மகிழ்ச்சியடைந்த முரளி, ஜனவரி மாதத்துக்காக காத்திருந்தார்.

உயிருக்கு போராடும் ரசிகர்... வீடியோ காலில் வந்து அதிர்ச்சியளித்த நடிகர்!

இந்த சூழலில் தான், கடந்த வாரம் இரு சக்கர வானத்தில் முரளில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்கு உள்ளானார். இதில் படுகாயமடைந்த முரளி தற்போது விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். முரளியின் 2 சிறுநீரகங்களும் விபத்தில் செயலிழந்ததால் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவயதிலிருந்தே தனது ஆஸ்தான நடிகர் ஜூனியர் என்.சி.ஆரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. தற்போது உயிருடன் இருக்கும்போதே தனது அபிமான நடிகரான ஜூனியர் என்.டி.ஆரை பார்த்து பேச வேண்டும் என கோரிக்கையை மருத்துவர்களிடம் முரளி முன் வைத்துள்ளார். இது குறித்து தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின.

இந்த நிலையில் முரளியின் செல்போனுக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்த அவருக்கு அவரது கண்களையே நம்ப முடியவில்லை. ஏனென்றால், அவருக்கு பிடித்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். வீடியோ காலில் முரளியிடம் பேசுகிறார். சற்றும் எதிர்பார்க்காத முரளி, உணர்ச்சி பொங்க ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசி கண்ணீர் விட்டு அழுதார். அவரிடம் பயப்பட வேண்டாம் எனவில், விரைவில் உடல் நலம் சீராகி வீடு திரும்புவாய் என்றும் ஜூனியர் என்.டி.ஆர். நம்பிக்கை அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
Embed widget