Jigarthanda DoubleX: ஜிகர்தண்டா 2 அப்டேட் கொடுத்த படக்குழு.. யானை மேல் மாஸாக அமர்ந்திருக்கும் லாரன்ஸ்..
ஜிகர்தண்டா 2 போஸ்டரில் யானையின் மீது அமர்ந்திருக்கும் ராகவா லாரன்ஸ், எஸ்.கே. சூர்யாவை நோக்கி துப்பாக்கியை நீட்டியிருக்கும் காட்சி
Jigarthanda DoubleX: ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (ஜிகர்தண்டா 2) படத்தின் டீசர் வரும் 11-ஆம் தேதி நண்பகலில் வெளியாகும் என போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்த ஜிகர்தண்டா திரைப்படம் வெளிவந்தது. லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்திருந்த அந்த படத்தில் முக்கிய கேரக்டரில், கேங்ஸ்டராக பாபி சிம்ஹா நடித்திருப்பார். இதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இயக்குநராக வரவேண்டும் என்ற கேரக்டரில் நடித்திருந்த சித்தார்த்தும் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ரவுடிகளிடம் சென்று மாட்டி கொள்வதுடன், ரவுடியை வைத்து படம் எடுக்கும் கதையாக ஜிகர்தண்டா இருந்தது.
விமர்சனத்தில் நல்ல வரவேற்பை பெற்றதால் ஜிகர்தண்டா படத்தின் அடுத்த பாகம் எப்பொழுது வரும் என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது மக்களே..
இதில் எஸ்.ஜே. சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் எப்பொழுது வெளியாகும் என்ற கேள்விகள் எழுத நிலையில் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
படக்குழு வெளியிட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போஸ்டரில், படத்தின் டீசர் வரும் 11-ஆம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் யானையின் மீது அமர்ந்திருக்கும் ராகவா லாரன்ஸ் எஸ்.கே. சூர்யாவை நோக்கி துப்பாக்கியை நீட்டியிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்திருப்பதால் இந்த பாகமும் முதல் பாகத்தை போல் காமெடி ஜானரில் இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#JigarthandaDoubleX
— karthik subbaraj (@karthiksubbaraj) September 9, 2023
More Than a 'Teaser'
Releasing on 11th September @ 12:12 pm
Let's Start XXing!!#MorethanATeaser#DoubleXDiwali @offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kunal_rajan @sheriffchoreo@kaarthekeyens @stonebenchers @5starcreationss… pic.twitter.com/bGKFGR8GK4
ரஜினிகாந்த் நடித்திருந்த சந்திரமுகி 2-ஆம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்தின் பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சந்திரமுகி 2 போல், ஜிகர்தண்டாவிலும் 2-ஆம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருப்பதால் அவரின் நடிப்பும், கேரக்டரும் எப்படி இருக்கும் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் படிக்க: Ethirneechal Marimuthu: காற்றில் கரைந்தார் மாரிமுத்து.. கண்ணீர் மழையில் உடல் தகனம்..