மேலும் அறிய

Srikanth Deva: செம சோகத்தில் ஸ்ரீகாந்த் தேவா.. திடீரென விஜய்யிடம் இருந்து வந்த அழைப்பு.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஸ்ரீகாந்த் தேவா, தான் இசையமைக்க வந்தது எப்படி என்பதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஸ்ரீகாந்த் தேவா, தான் இசையமைக்க வந்தது எப்படி என்பதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பிரபுதேவா நடித்த டபுள்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. இசையமைப்பாளர் தேவாவின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமான அவர், தனது தனித்துவமான இசையால் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். மேலும் விஜய், அஜித், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கானா பாட்டுக்கு எப்படி தேவாவோ, அந்த மாதிரி பார்ட்டி பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா என கொண்டாடப்பட்டார். இவருக்கு கருவறை என்னும் குறும்படத்துக்கு இசையமைத்ததற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனால் ஸ்ரீகாந்த் தேவா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். 

இசையமைக்க வந்தது எப்படி?

இப்படியான நிலையில், ஸ்ரீகாந்த் தேவா தான் சினிமா துறைக்குள் வந்தது எப்படி? என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “நான் சினிமாவுக்கு ரொம்ப ஈசியா தான் வந்தேன். அது உண்மை தான். அதுக்கு காரணம் எங்க அப்பா தேவா தான். அவருடைய முதல் படம் கிடைக்கும் போது நான் 7 ஆம் வகுப்பு தான் படிச்சிட்டு இருந்தேன். வீட்டுல இருக்க இசை கருவியில் நான் கைவைத்தால் திட்டுவார். காரணம், அவருக்கு முதல் பட சான்ஸ் கிடைக்க கஷ்டமா இருந்துச்சு.

நானும் இந்த துறையில் வந்தால் கஷ்டப்படுவான்னு அப்பா என்னை வேற மாதிரி படிக்க வைக்க பிளான் போட்டார். ஆனால் ‘மனசுக்கேத்த மகராசா’ படம் வாய்ப்பு கிடைத்தது. நானும் படிப்பை விட்டு விட்டு அப்பாவுடன் சேர்ந்து விட்டேன்.  நிறைய படம் கீபோர்ட் வாசிச்சிட்டு இருந்தேன். அப்படியாக ஒருநாள் இயக்குநர் பாண்டியராஜன் வந்து என்னிடம் அடுத்து என்ன பண்ணப்போற? என கேட்டார். நான் இசை தான் என சொன்னேன். அடுத்த ஒரு வாரத்திலேயே வாய்ப்பு கொடுத்தார். 

என்னை கையைப் பிடித்து அப்பாவிடம் இழுத்துச் சென்று வாய்ப்பு கொடுப்பதை பற்றி சொன்னார். பிரபுதேவா கால்ஷீட் கிடைச்சிருக்கு. டபுள்ஸ் படம் தான் அது என பாண்டியராஜன் விவரத்தை சொன்னார். அப்பாவுக்கு 40 வயதில் கிடைத்த சான்ஸ், எனக்கு 20 வயதில் கிடைத்ததை கண்டு அப்பா பெருமைப்பட்டார். நான் உங்களால தானே இந்த வாய்ப்பு கிடைத்தது என சொன்னேன். அவரோ, உன்னுடைய திறமைக்கு தான் கிடைத்தது என பாராட்டினார். 

விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

எனக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி திருமணம் நடந்துச்சு. அது முடிந்ததும் பெரிய ஹீரோ நடிச்ச படம் புக் ஆச்சு. உடனே என் மனைவியிடம் நீ வந்த ராசி தான் என சொன்னேன். அவரும் சந்தோஷப்பட்டார். ஆனால் அடுத்த 2 நாட்களில் வேறொரு இசையமைப்பாளர் பெயர் போட்டு போஸ்டர் வந்துச்சு. நான் எப்படிடா இதனை மனைவியிடம் சொல்வது என தெரியாமல் கவலைப்பட்டேன். அதனை அவமானம் சொல்ல முடியாது. த்ரில்லர் படம் என்பதால் நாம் செட்டாக மாட்டோம் என நினைத்து விட்டார்கள் போல நினைத்து விட்டேன்.

மனைவிக்கு தெரியாத மாதிரி பேப்பரை எல்லாம் ஒளித்து வைத்தாலும் அவருக்கு விஷயம் தெரிந்து விட்டது. என்னிடம் வருத்தப்பட்டு கேட்டார்கள். நான் நமக்கு எது கிடைக்கணுமோ அது கிடைக்கும் என பாசிட்டிவாக பேசி ஆறுதல் சொன்னேன்.அதிலிருந்து 2 நாட்கள் கழித்து ஒரு கால் வருகிறது. நான் விஜய் பேசுகிறேன் என சொன்னதும் செம ஷாக். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம். உங்க பாட்டு எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு என சிவகாசி பட விவரத்தை தெரிவித்தார். அந்த படம் எனக்கொரு திருப்புமுனையாக அமைந்தது” என ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
தாறுமாறாக ஓடிய பேருந்து; தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு - திண்டுக்கல்லில் சோகம்
Embed widget