மேலும் அறிய

Brother First Look: ஜெயம் ரவி படம் மூலம் கம்பேக் கொடுக்க தயாரான ராஜேஷ்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் ப்ரதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி (Jayam Ravi) நடித்திருக்கும் ப்ரதர் (Brother) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

எம் ராஜேஷ்

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ராஜேஷ். தனித்துவமான ஹீரோ காமெடியன் டிரெண்டை உருவாக்கியவர் இயக்குநர் ராஜேஷ்…இதனைத் தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன் , ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்டப் படங்களை இயக்கி  அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஃபேமிலி என்டர்டெயினராக உருவானார்.

இந்தப் படங்களில் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் சந்தானம். ஆனால் அதற்கடுத்தபடியாக இவரது இயக்கத்தில் வந்த “ஆல் இன் அழகுராஜா”, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க உள்ளிட்ட படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தது. இதற்கடுத்த படியாக இவர் சிவகார்த்திகேயனோடு மிஸ்டர் லோக்கல் படத்தில் இணைந்தார். இந்தப்படமும் அட்டர் ப்ளாப் ஆனது.

அடுத்ததாக, இவரது இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான “ கடவுள் இருக்கான் குமாரு” தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் இவர் ஜெயம் ரவியுடன் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. 

 ப்ரதர்

ப்ரதர் என்று இந்தப் படத்திற்கு டைட்டில் வைக்கப்படிருந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ப்ரதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  நகரம் மற்றும் கிராமம் இரு நிலங்களை பின்னணியாக வைத்து ஜெயம் ரவியின் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் குறித்தான தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்

இதனிடையே அண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில்  உருவாகவிருக்கும் சைரன் படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஷ்வர் ஆகியோர் நடித்துள்ளார்கள். முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் வயதான கதாபாத்திரம் ஒன்றிலும், இளைஞர் கதாபாத்திரம் ஒன்றிலும் என இரண்டு கதாபாத்திரங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் கேரியரில் சைரன் திரைப்படம் முக்கியமான ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் இறைவன். மனிதன், என்றென்றும் புன்னகை உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் ஐ அகமத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி , நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Embed widget