Jana Nayagan Audio Launch:ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக்கொடுக்கிறேன்! ஜனநாயகன் இசை வெளியீட்டில் விஜய் உருக்கமான பேச்சு
Jana Nayagan Audio Launch: நான் வெறும் நன்றி சொல்ல விரும்பவில்லை. அடுத்த 30-33 வருடத்திற்கு அவங்களுக்காக நிற்க போறேன் என்று விஜய் பேசினார்

நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது, இந்த விழாவில் பேசிய விஜய் எனக்காக எல்லாரையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காய் நான் சினிமா விட்டு கொடுக்கிறேன் என்று விஜய் பேசி இருந்தார்.
நண்பர் அஜித் நடித்த பில்லா
ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் இலங்கைக்குப் பிறகு, மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். இங்கு படமாக்கப்பட்ட சில தமிழ் படங்களை நான் நினைவு கூர விரும்புகிறேன். நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படமும் இங்க தான் எடுத்தாங்க, என்னுடைய. காவலன், குருவி போன்ற எனது படங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது.
எனக்கு மாளிகையை கொடுத்த ரசிகர்கள்
நான் சினிமாவுக்குள் நுழைந்தபோது, இந்தத் துறையில் ஒரு சிறிய மணல் வீடு கட்ட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு அரண்மனையைக் கொடுத்திருக்கிறீர்கள்
ரசிகர்களுக்காக நிற்க போறேன்
எனது திரைப்பட வாழ்க்கையின் முதல் நாளிலிருந்தே நான் எல்லா வகையான விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். 33 ஆண்டுகளாக ஆதரவாக இருப்பது எளிதல்ல, ஆனால் என் ரசிகர்கள் அதை எனக்குச் செய்தார்கள். நான் வெறும் நன்றி சொல்ல விரும்பவில்லை. அவங்களுக்காக அடுத்த 30-33 வருடத்திற்கு நிற்க போறேன், இந்த விஜய் ரசிகர்களுக்காக, நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன் என்றார்.
மியூசிக் டிபார்ட்மேண்ட் ஸ்டோர்
நான் அனிருத்துக்கு ஒரு புதிய பெயரை வைக்க விரும்புகிறேன். மியூசிக் டிபார்ட்மேண்ட் ஸ்டோர் என்று வைக்கலாம். இந்தக் கடைக்குச் சென்றால், எல்லா வகையான பாடல்களையும் பின்னணி இசையையும் உங்களுக்கு கிடைக்கும் என்று பேசியிருந்தார்.
எச் வினோத் குறித்து;
வினோத் எப்போதும் சமூகப் பொறுப்புள்ள இயக்குநராக இருந்து வருகிறார். நாங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே சேர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது, ஆனால் அது நடக்கவில்லை. இப்போது நாங்கள் கைகோர்த்ததில் மகிழ்ச்சி. மமிதா வெறும் டூட்டாக மட்டும் இருக்கப் போவதில்லை, ஜனநாயகனுக்குப் பிறகு அவர் ஒரு குடும்பங்கள் கொண்டாடும் தங்கச்சியாக இருப்பார் என்றார்
மேலும் வாழ்க்கையில் வெற்றிபெற, உங்களுக்கு நண்பர்கள் தேவையா என்று தெரியவில்லை, ஆனால் உங்களுக்கு நிச்சயமாக ஒரு வலுவான எதிரி தேவை. ஒரு வலுவான எதிரி இருந்தால் மட்டுமே, நீங்கள் வலிமையானவராக மாறுவீர்கள் என்றார்.
பொங்கல் ரிலீஸ்:
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவின் வீடியோக்களை விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜனவரி 9ம் தேதி ரிலீசாகிறது.
தெலுங்கில் பாலையா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இந்த படம் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் குடும்ப கதையாக மகள் - வளர்ப்பு தந்தை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த அந்த படத்தை, விஜய்யின் அரசியல் வருகைக்காக சில மாற்றங்களுடன் எச்.வினோத் இயக்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்ற படக்குழுவும், ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.






















