மேலும் அறிய

Jailer Update: ‛கொல காண்டுல தலைவர்...’ ஜெயிலுக்குள் சூப்பர் ஸ்டார்... வெளியானது ஜெயிலர் போஸ்டர்!

Rajinikanth Jailer Update: பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனுடன் இணைவதை ரஜினி கைவிட்டு விட்டார் என தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் இல்லை என்னும் அளவுக்கு ஜெயிலர் படத்துக்கான முன்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

ரஜினி நடிக்கவுள்ள ஜெயிலர்(Jailer) படத்தின் முக்கிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது, இதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியிருந்தது. இந்த பீஸ்ட் படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானது. அவரின் அடுத்தப்படத்தை இயக்கப்போகும் இயக்குநர்கள் பட்டியலில் ஏராளமான பெயர்கள் இடம் பெற்ற நிலையில் கடைசியில் ரஜினியின் அடுத்தப்படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் இயக்குநர் நெல்சனே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில் படத்தின் பெயர் “ஜெயிலர்” என தேர்வு செய்யப்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

இதற்கிடையில் பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனுடன் இணைவதை ரஜினி கைவிட்டு விட்டார் என தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் இல்லை என்னும் அளவுக்கு ஜெயிலர் படத்துக்கான முன்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆகஸ்ட் 15 அல்லது 22 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அப்டேட்டை தெரிவித்திருந்தார். இதனிடையே இந்த படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக பெயர்கள் அடிபட்ட நிலையில் தான் நடிப்பதை ரம்யா கிருஷ்ணனே உறுதி செய்திருந்தார். மேலும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருந்த நிலையில் நேற்றைய தினம் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இன்று காலை 11 மணிக்கு ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதால் அப்போது முதலே சமூக வலைத்தளங்கள் களைக்கட்டின. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget