HBD Rajnikanth: ஜெயிலர் படத்தில் ரஜினியின் பெயர்.. சீக்ரெட்டாக இடம்பிடித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. எப்படி தெரியுமா?
ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களை சர்வதேச அளவில் கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அண்ணாத்தா படத்தை தொடர்ந்து, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. அதைதொடர்ந்து. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராகவும், பல்லவி சிங் ஜெயிலர் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராகவும் பணியற்றி வருகின்றனர்.
புதிய போஸ்டர் வெளியீடு:
இதனிடையே, ஜெயிலர் படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் உருவாக்க கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி ஜெயிலர் படத்தின் அப்டேட் தொடர்பாக, புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படம் தொடர்பான புதிய தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Muthuvel Pandian arrives at 12.12.22 - 6 PM😎
— Sun Pictures (@sunpictures) December 11, 2022
Wishing Superstar @rajinikanth a very Happy Birthday!@Nelsondilpkumar @anirudhofficial #Jailer#SuperstarRajinikanth #HBDSuperstar #HBDSuperstarRajinikanth pic.twitter.com/ocF0I7ZPEi
ரஜினி கதாபாத்திரத்தின் பெயர்:
புதிய போஸ்டரில் நாற்காலி ஒன்றில் அமர்ந்து இருக்கும் ரஜினி, கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அதோடு, ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் முத்துவேல் பாண்டியன் எனவும், இன்று மாலை 6 மணி அளவில் அவர் விரைகிறார் என்றும் குறிப்பிடபட்டு உள்ளது. முத்துவேல் பாண்டியன் எனும் ரஜினி கதாபாத்திரத்தின் பெயர், ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அநேகமாக ஜெயிலர் திரைப்படத்தின் டீசர் மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் திரைப்படத்தில் ஸ்டாலின் ரெஃப்ரன்ஸ்:
கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக பொறுப்பேற்றார். அப்போது நிகழ்ந்த பதவி பிரமாணத்தின்போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என கூறி அவர் பதவியேற்றுக்கொண்டார். தனது தாத்தா, தந்தை ஆகியோரின் பெயரயும் கூறி, ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டது தொடர்பான வீடியோ தேசிய அளவில் டிரெண்டானது. இந்நிலையில், அதே பாணியில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் பெயர் முத்துவேல் பாண்டியன் என வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.