Jailer Audio Launch: ’ஒரு நிமிஷம் இருங்க’ .. ரஜினி பேசும் போது குறுக்கிட்ட ரம்யா கிருஷ்ணன்.. அதிர்ந்த நேரு ஸ்டேடியம்..!
Jailer Audio Launch: ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும்போது, நடிகை ரம்யா கிருஷ்ணன் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும்போது, நடிகை ரம்யா கிருஷ்ணன் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக “ஜெயிலர்” படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஒரு பக்கம் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும், மறுபக்கம் படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதுவரை 3 பாடல்கள் நேரடியாக வெளியான நிலையில், இப்படத்தில் ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவரது கேரக்டர் அறிமுகம் கடந்தாண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளில் வெளியானதில் இருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இப்படியான நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்,ஆடியோ வெளியிட்டு விழா இன்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை புகழ்ந்து தள்ளினார். தன்னுடைய சினிமா கேரியரை செதுக்கிய இயக்குநர்கள் வரிசையில் நெல்சனும் உள்ளார் என சொன்னபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும் ’சூப்பர் ஸ்டார்’ டைட்டில் என்றுமே தனக்கு தொல்லை தான் எனவும், ஹூக்கும் பாடலில் இடம்பெற்ற அந்த வார்த்தையையும் நீக்க சொன்னேன் எனவும் தெரிவித்தார்.
இப்படி ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் கீழே அமர்ந்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிச் சென்று, திடீரென குறுக்கிட்டார். அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் இருவருக்குமிடையேயான காட்சியில் இடம் பெற்ற பிரபலமான, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும். கூடவே பொறந்தது. எங்கேயும் போகாது” என தெரிவிக்க ஒட்டுமொத்த நேரு ஸ்டேடியமும் ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்தது.