மேலும் அறிய

Jai Bhim | அழுத்தமானது.. இதை திருப்பிக்கொடுக்க போறேன்.. சூர்யா கொடுத்த ஜெய்பீம் அப்டேட்..

“ஜெய்பீம் படம் நான் நடித்த மற்ற படங்களில் இருந்து வித்தியாசமானது. இதற்கு முன் நடித்து உள்ள எந்த படத்தின் சாயலிலும் இருக்காது”

நல்ல படங்களில் நடிப்பதன் மூலம் ரசிகர்கள் கொடுத்த அன்பை திருப்பியளிக்க விரும்புவதாக நடிகர் சூர்யா தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு முறை நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும்போதும் தனது வசீகர நடிப்பாலும், தனித்துவமான தோற்றத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். கடந்த ஆண்டு சூரரைப்போற்று படத்தின் மூலம் வானம் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா என கேள்வி எழுப்பிய சூர்யா, தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் மூலம் சட்டம் அனைவருக்கும் சமம் என பேச வருகிறார்.

சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா இப்படத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்துள்ளார். சாதி வெறிக்கு எதிரான  அழுத்தமான வசனங்களுடன்  வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

கடந்த 24 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூர்யாவின் ஜெய் பீம் படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி இருக்கிறது. ஜெய் பீம் சவாலானதாக இருந்ததாக நடிகர் சூர்யா தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “நான் எனது 24 ஆண்டுகால திரைத்துறை பயணத்தில் பல்வேறு உயரங்களை பல சறுக்கல்களையும் சந்தித்து இருக்கிறேன். எல்லா தருணங்களின் எனது ரசிகர்களும், சினிமா விரும்பிகளும் என்னுடன் துணை நின்றனர். அவர்கள் என் மீது அதிக நம்பிக்கை வைத்து உள்ளார்கள். என் மீதான அவர்களின் நம்பிக்கை என்பது எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு அழகிய உறவை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் என் மீது காட்டி வரும் அன்புக்கு பகரமாக நல்ல படங்களை அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறேன்.” என்றார்.

Jai Bhim | அழுத்தமானது.. இதை திருப்பிக்கொடுக்க போறேன்.. சூர்யா கொடுத்த ஜெய்பீம் அப்டேட்..

ஜெய் பீம் படம் தான் நடித்த மற்ற படங்களில் இருந்து வித்தியாசமானது. இந்த படம் நான் இதற்கு முன் நடித்து உள்ள எந்த படத்தின் சாயலிலும் இருக்காது என அவர் கூறியுள்ளார். “ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்டு உள்ள கதை, நடித்துள்ள நடிகர்கள், அதில் காட்டப்பட்டு இருக்கும் உணர்வுகள், என ஒட்டுமொத்த படமும் அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் சாதாரணமான பொழுதுபோக்கு படம் இல்லை. ஆனால், இப்படம் உங்கள் மனதில் நிச்சயம் தாக்கத்தை உண்டாக்கும். பார்வையாளர்களுக்கு என்றும் நினைவில் இருக்கும் ஒன்றாக ஜெய் பீம் இருக்கும்.” என சூர்யா கூறியுள்ளார்.

தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரெஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்பட்டத்தை சூர்யாவின் 2டி பிரொடெக்சன்ஸ் தயாரித்து இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget