மேலும் அறிய

லட்சுமியாக மாறிய அக்னி கலச காலண்டர் - ஜெய் பீமில் திடீர் மாற்றம்!

அக்னி கலசத்துக்கு பதிலாக கடவுள் லட்சுமியின் காலண்டர் மாற்றப்பட்டுள்ளது.

சூர்யா நடித்து தயாரித்திருக்கும் படம் ஜெய் பீம். இருளர் இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை காவல் துறையினர் லாக்கப்பில் வைத்து கொலை செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த அனைவரும் படத்தின் தாக்கத்திலிருந்து இன்னமும் வெளிவரவில்லை. படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிளம்பிய நிலையில் வன்னியர்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதில் காட்டப்பட்ட சில குறியீடுகள் வன்னியர் சமூகத்தை காயப்படுத்தும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் காட்டப்பட்ட ஒரு காட்சியில் வில்லன் போலீஸ் வீட்டில் அக்னி கசலம் பொறிக்கப்பட்ட காலண்டர் இருக்கும். இதனை தற்போது படக்குழு மாற்றியுள்ளது. அக்னி கலசத்துக்கு பதிலாக கடவுள் லட்சுமியின் காலண்டர் மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதற்காக படக்குழு அந்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், காவல் அதிகாரியின் பெயரை அனைத்துக் காட்சிகளிலும் மாற்ற வேண்டும் என வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் சூர்யாவுக்கு சொந்தமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், இருளர் சமுதாயத்து அப்பாவி இளைஞர் ஒருவர் காவல்துறை விசாரணையில் படுகொலை செய்யப்பட்டதையும், அந்த இளைஞரின் மனைவி போராடி நீதி பெற்றதையும் அடிப்படையாக வைத்து 'ஜெய்பீம்' என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவது தான் இந்தத் திரைப்படத்தின் நோக்கம் என்று படக்குழு பெருமை பேசிக் கொண்டிருக்கிறது. நல்லது. மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை வெளிக்கொண்டு வருவதற்கானது என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒரு திரைப்படம், உண்மைகளை மறைத்து பொய்களைக் கட்டமைக்க முயன்றிருப்பதும், தங்களின் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சிக் கொள்வதற்காக, நல்லவர்களைக் கெட்டவர்களாகக் காட்ட முயன்றிருப்பதும், ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்தியிருப்பதும் அருவருக்கத் தக்கவை ஆகும். திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கத்திற்கும், திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் குறியீடுகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. 


லட்சுமியாக மாறிய அக்னி கலச காலண்டர் - ஜெய் பீமில் திடீர் மாற்றம்!

அவை திரைப்படக் குழுவினரின் முகத்திரையைக் கிழித்து அகத்திரையையும், அதில் படிந்து கிடக்கும் அழுக்கு - சகதிகளையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்திருக்கிறது என்ற உண்மையைக் காட்டுவதை விட, அந்த படுகொலையை அரங்கேற்றிய காவலர் ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலை நிறுத்துவதற்காகத் தான் படக்குழு பாடுபட்டிருக்கிறது. அழுக்கு மனதுடனும், வடிகட்டிய வன்மத்துடனும் அரங்கேற்றப்பட்டுள்ள இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞளை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொடுமைப்படுத்தி படுகொலை செய்யும் காவல்துறை உதவி ஆய்வாளரை வன்னியர் என்று காட்டும் நோக்கத்துடன் அவரது வீட்டில் வன்னியர் சங்கத்தின் நாட்காட்டி இருப்பது போன்று காட்சிப்படுத்தியுள்ளனர் என்றார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget