மேலும் அறிய

Monica Bellucci: அழகென்பது கொண்டாடப்பட வேண்டியது.. உங்களுக்கு மோனிகா பெல்லுசியை தெரியுமா?

மோனிகா பெல்லுசியின் வீடு இருக்கும் தெருவில் நீங்கள் வசித்திருந்தால் இன்று அவரது பிறந்தநாளுக்காக பூக்கள் ஏந்தி அவர் வாசலில் நின்றிருப்பீர்கள். இன்று 59 வயதை எட்டியுள்ள அவரது கதை தெரியுமா?

அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருக்கலாம். அவர் நடித்த படத்தின் பெயரைச் சொன்னால் ஒரு சிலருக்குத் தெரியலாம். ஆபாசப் படங்களின் தளத்தில் அவர் நடித்தப் படங்களின் காட்சிகளை ஒரு சிலர் பார்த்திருக்கலாம். ஆனால் முதல் முறை அவரை பார்க்கும் ஒருவர் ஏதோ ஒரு வகையில் தான் வாழ்க்கையில் பார்த்த அழகான பெண்களில் ஒருவராக மோனிகாவை சொல்வார்கள்..

தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பெண்ணின் முகமாக அது உங்கள் மனதில் நிலைத்துவிடலாம். மோனிகா பெல்லுசியின் வீடு இருக்கும் தெருவில் நீங்கள் வசித்திருந்தால் இன்று அவரது பிறந்தநாளுக்காக பூக்கள் ஏந்தி அவர் வாசலில் நின்றிருப்பீர்கள். 59 வயதாகும் இவரது கதை தெரியுமா?

மோனிகா பெல்லுசி

Monica Bellucci: அழகென்பது கொண்டாடப்பட வேண்டியது.. உங்களுக்கு மோனிகா பெல்லுசியை தெரியுமா?

இத்தாலியில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வந்த தம்பதியினர் லுயிகி பெல்லுசி (கணவர்) மெளஷியா கஸ்ச்தினெல்லி (மனைவி). மெளஷியாவுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் சுத்தமாகவே இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துகிடுகிறார்கள்.

தங்களது வாழ்க்கையை இறுதிக் காலங்களை இருவர் மட்டுமே தனியாக கழிக்க தைரியம் சொல்லிக் கொண்டிருந்த அந்தத் தம்பதியினர் வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை வந்து பிறக்கிறாள். அது ஒரு அற்புதம் என்பதைத் தவிர வேறு மாதிரி சொல்லத் தெரியவில்லை. மோனிகாவில் தந்தை ஒரு சிறு விவசாயி.. கனிகள் சேகரித்து அவற்றின் மூலம் வைன் செய்வது இவருக்கு பிடித்தமான வேலை. மோனிகாவின் அன்னை ஒரு ஓவியக் கலைஞர். தங்களது பெண் 5 வயதை எட்டியபோதே பெரியவர்களுடன் இணைந்து உதவி செய்ய மோனிகா கற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக தங்களுடன் விவசாய வேலைகளில் அவரை ஈடுபடுத்தினார்கள்.

மோனிகாவின் காதல்

தனது அன்றாட வாழ்க்கையில் இருந்த மோனிகாவிற்கு கனவுகள் தோன்ற ஆரம்பித்தது தனது தந்தையுடன் பொருட்கள் வாங்க நகரத்திற்கு போகும்போது தான். அங்கு மாட்டப்பட்டிருக்கும் மாடல்களின் அழகு அவரை வசீகரித்தது. அன்று மோனிகா அங்கு தன்னைத் தானே பார்த்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Monica Bellucci: அழகென்பது கொண்டாடப்பட வேண்டியது.. உங்களுக்கு மோனிகா பெல்லுசியை தெரியுமா?

அழகு என்கிற ஒன்றின் மீது மனிதனுக்கு இருக்கும் தீராக்காதலை உணர்ந்தபின் ஒரு விவசாய வீட்டுப் பெண்ணாக மட்டுமே மோனிகாவால் வாழ முடியவில்லை. ஆனால் ஒரு மாடல் ஆக வேண்டும் என்றால் அதற்கான பணவசதியும் தனது குடும்பத்தில் இல்லை என்பதையும் அவர் தெரிந்தே வைத்திருந்தார். இதனால் தனது பணத்தேவையை பூர்த்தி செய்ய, தான் படித்து நல்ல வேளைக்கு போகவேண்டியது முக்கியம் என்று முடிவு செய்தார்.

தான் ஒரு மிகப்பெரிய நடிகையாக உருவான காலத்தில் மோனிகா அதிகம் பேசியிருப்பது தனது பள்ளிக் காலத்தை பற்றிதான். தனது கனவை நிறைவேற்ற தான் அதிக சவால்களை எதிர்கொண்ட காலமாக பள்ளி அவருக்கு இருந்தது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரது மனதைக் கவரும் ஒரு பெண்ணாக இருந்தார் மோனிகா. தான் தனியாக உணர்ந்த காலத்தில் எல்லாம் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் ஆதரவைத் தேடி போயிருக்கிறார்.  மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த தனது ஆசிரியர் ஒருவரால் ஈர்க்கப்பட்டு, தானும் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று முடிவு செய்தார். மதிப்புள்ள மற்றும் நல்ல வருமானம் இருக்கக் கூடிய ஒரு வேளையாக இந்த வேலையை அவர் கருதினார்.

பருந்தாகிய ஊர்க்குருவி

தனது பள்ளிப் படிப்பை முடித்ததும் தன் பதினெட்டு வயதில் பெருகியாவில் வழக்கறிஞர் படிப்பைத் தொடங்குகிறார். தனது படிப்பு செலவை சமாளிக்க ஒரு பீட்சா கடையில் வெயிட்டராக வேலை செய்கிறார். இந்த நேரத்தில் தான் மாடலாகும் தனது கனவிற்கு முதல் வாய்ப்பைக் கண்டுபிடிக்கிறார் மோனிகா பெல்லுசி. ஒரு சிறு நிறுவனத்திற்கு மாடலாக வேலை செய்கிறார்.

Monica Bellucci: அழகென்பது கொண்டாடப்பட வேண்டியது.. உங்களுக்கு மோனிகா பெல்லுசியை தெரியுமா?

ஆனால் இந்த சின்ன ஊரில் தனது கனவுக்குத் தீனிப்போடும் வகையில் வாய்ப்புகளோ, பண வசதியோ இல்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொள்கிறார். தனது வீட்டாரிடம் தைரியமாக தனது ஆசையை வெளிப்படுத்தி பிரபல ஊரான மிலானுக்கு செல்கிறார். தனது கனவிற்காக எந்த வகையிலும் தனது வழக்கறிஞர் தொழிலை அவர் கைவிடவில்லை. ஆனால் அதற்கான நேரமும் வந்தது.

தனக்கு சுதந்திரம் கொடுக்கும் என்று தான் நம்பி வந்த ஊர் இடுக்கான ஒரு அறையில் தன்னைப் போல் கனவுகளுடன் வந்த ஒருவருடன் தங்கவைத்தது. மேலும் தனது ஊரில் இருந்தது போல் இங்கும் ஒரு சின்ன கஃபேயில் ஒரு வேலை. இவ்வளவு பெரிய ஊரில் இவ்வளவு போட்டி இருக்கும் ஒரு ஊரில் வழக்கறிஞராவது மிக கடினமானது என்பதை மோனிகா புரிந்துகொள்ள சில காலம் ஆனது. அதற்கு பின் இருந்து நல்ல க்ளையன்ஸ் பிடிக்க மற்ற மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்க மாடலிங் செய்ய வாய்ப்புகளைத் தேடத் துவங்கினார்.

மோனிகா பெல்லூசி

பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு பிரபல நிறுவனம் மோனிகாவை மாடலாக பயண்படுத்தியது. தனக்கு தெரியாத வழக்கறிஞர் வேலையில்தான் மோனிகா சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் அவரது அழகை உலகத்தை ரசிக்க வைக்க அவருக்கு நீண்ட நாள் ஆகவில்லை. ஃபேஷன் நகரமான பாரிஸிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார் மோனிகா.

Monica Bellucci: அழகென்பது கொண்டாடப்பட வேண்டியது.. உங்களுக்கு மோனிகா பெல்லுசியை தெரியுமா?

அடுத்தடுத்த பிரபல இதழ்களில் அவரது புகைப்படங்கள் முகப்பு படங்களாக இடம்பெற்றன. சின்ன சின்ன டிப்ஸ்களை எதிர்பார்த்து வேலை செய்த மோனிகா, இப்போது மிகப்பெரிய தொடகையை சம்பளமாக வாங்கத் தொடங்கினார். 2000ஆம் ஆண்டின் போது மோனிகா பெல்லுசி மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்று விட்டார். தங்களது பிராண்ட்களை விளம்பரம் செய்ய நிறுவனங்கள் அவரை கூப்பிட்டன.

பத்திரிகையாளர்கள் தங்களது பத்திரிகையில் போடுவதற்கு அவரது ஒரு புகைப்படத்திற்காக கூட்டத்தில் சண்டை போட்டுக் கொண்டார்கள். இத்தாலி, பாரிஸ் மட்டுமில்லாமல் ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரலமான ஒரு மாடலாக மாறினார் மோனிகா. 2004 ஆம் ஆண்டு ஒரு பிரபல பத்திரிகை வெளியிட்ட உலகத்தின் 100 அழகிய பெண்கள் என்கிற பட்டியலில் பல முன்னணி ஹாலிவுட் நடிகைகளை பின்னுக்குத் தள்ளியது மோனிகாவின் பெயர்.

சினிமா பயணம்

1990 காலக்கட்டத்தில் இருந்தே மாடலிங் உடன் சினிமா மீதும் அவருக்கு ஆர்வம் எழுந்தது. படம் ஒன்றில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மோனிகா பெரிய அளவில் அங்கீகரிக்கப்படவில்லை. தன்னை கேமரா முன் வைத்து எப்போதும் ரசிக்கக் கூடியவராக இருந்தார் மோனிகா. இதனால் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரால் தனக்கு பிடித்த ஒன்றை தொடர்ந்து செய்ய முடிந்தது.

காட்ஃபாதர் படத்தை இயக்கிய பிரான்சிஸ் ஃபோர் கொபோலா தான் இயக்கிய டிராகுலா படத்தில் நடிக்கும்  பெரும் வாய்ப்பு மோனிகாவுக்கு கிடைத்தது. இதுவரை அனைவருக்கும் மாடலாக மட்டுமே பழக்கப்பட்ட மோனிகா பெல்லுச்சி நடிகையாக அவர்கள் மனதில் பதிந்தது இந்தப் படத்தால் தான்.

இதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு உச்சபட்ச சம்பளம் பெறும் நடிகையாக மோனிகா மாறினார். Melena, Irreversible , Doberman, Shoot Em Up , brothers grimm உள்ளிட்ட படங்களில் நடித்து திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப் படும் நடிகையாக மாறினார். இன்று தனது 59 ஆவது வயதிலும் இளம் தலைமுறையினர் மொழி, இனம் பேதமின்றி அவரது அழகைக் கொண்டாடுகிறார்கள்.

எது அழகு?

பொதுவாகவே அழகு குறித்த பல்வேறு  போலியான பிம்பங்களை திரைப்படங்கள் விளம்பரங்கள் கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், மோனிகா பெல்லுசி  வழக்கமான வெள்ளைக்கார பெண் ஒருவரின் மீது உருவாக்கப்படும் பிம்பமாக தோன்றலாம்.

Monica Bellucci: அழகென்பது கொண்டாடப்பட வேண்டியது.. உங்களுக்கு மோனிகா பெல்லுசியை தெரியுமா?

ஆனால், தமிழில் ஒரு சில்க் ஸ்மிதா, இந்தியில் மாதுரி திக்ஷித் ஆகியோர் இயற்கையாக ஒரு நிலத்தை பிரதிபலிக்கும் அழகாக எப்படி கருதப்படுகிறார்களோ, அதே மாதிரிதான் கலைகளின் பிறப்பிடமான இத்தாலியின் தனித்துவமான அழகு அம்சங்கள் பொருந்தியவர் மோனிகா. மோனிகா பற்றி புகைப்படக் கலைஞர் ஒருவர் சொன்ன புகழ்பெற்ற வாக்கியம் இருக்கிறது. ”இத்தாலியின் அனைத்து கலை வடிவமும் கைகூடி வந்த பெண் மோனிகா”.

உண்மையில் ரசிகர்கள் மட்டுமில்லை தன் அழகை தானே மதித்தார் மோனிகா.  ”ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்கு குறிப்பிட்ட அளவு நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை அறிவுறுத்தி இருக்கிறார். பெண்கள் தங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வது தங்களை அழகுபடுத்திக் கொள்ளும்போது தான் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

அழகு என்பது பெண்கள் தங்களைத் தானே நேசிக்கத் தேவையான ஒரு வரம். அழகும் திறமையும் இருந்து ஏதோ ஒரு பணக்காரனுக்கு மனைவியாக இருபதற்காக அதை நாம் வீணாக்க கூடாது” என்று தனது பேட்டிகளில் மோனிகா கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் அழகு மட்டும் இல்லாமல் தனது அறிவை வெளிக்காட்டி அசரடிக்கக் கூடியவர். ஆங்கிலம், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானிய மொழி சரளமாக பேசக்கூடியவர். “அழகு என்பது இரண்டே விஷயங்களில் மட்டும் தான் ஒரு பெண்ணுக்கு பிரச்சனையாக இருக்க முடியும். ஒன்று உங்களுக்கு அழகென்பது துளியும் இல்லாதபோதும், அழகைத் தவிர வேறு எதுவுமே ஒரு பெண்ணிடம் இல்லாதபோதும்“ என்று கூறியிருக்கிறார்.

அழகு என்பது அவருக்கு வெறும் ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமில்லாமல் மிக நுட்பமான ஒரு அர்த்தத்தை கொடுத்திருக்கிறது என்பதை அவரது வார்த்தையில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். மோனிகா பெல்லுசிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget