Ishwarya Rajinikanth: உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை... ஐஷ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பதிவு
ஐஷ்வர்யா தனது தந்தை ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, உங்களை இயக்கும் நாள் வரும் என்று நினைத்ததே இல்லை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.
தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.ரஜினிக்கு தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டே வெளியாக உள்ளது.
லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்ப்பதற்காக திரளான மக்கள் குவிந்தனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புதிய புகைப்படம் ஐஷ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளதுள்ளார். அதில் அவர்,
"நான் உங்களைப் பார்த்து வளர்ந்தேன். உங்களை இயக்கும் நாள் வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. நான் உங்களை ரசித்திருக்கிறேன். நான் உங்களை வணங்குகிறேன். உங்களுடன் சேர்ந்து இந்த உலகை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் அப்பா. இன்னும் இன்னும் அதிகமாக நான் உங்களை நேசிக்கிறேன்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
லால் சலாம் படத்தில் ரஜினிகாந்துக்கு கவுரவத் தோற்றம் தான்.இரண்டு சண்டை காட்சிகளில் மாஸ் கட்டுகிறாராம் ரஜினி. மேலும் இந்த படம் கிரிக்கெட் சார்ந்த திரைப்படம் என்பதால் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கபில் தேவ் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மொய்தீன் பாய் ஆட்டம் என்ற தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ரஜினி ஒரு இஸ்லாமியர் தோற்றத்தில் தொப்பி அணிந்து இருப்பது போலவும் அவருக்கு பின்னணியில் கலவரம் வெடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. சாந்தியும், சமாதானமும் உண்டாகும் என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் இந்த தோற்றம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.