என்னது? பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் டான்ஸரா...? திரைப்பயணம் ஒருப்பார்வை
விஜய் டிவி-யின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. குடும்ப நாடகமான இதில் ஹூரோ போன்ற கேரக்டரில் நடித்து வருபவர் கதிர் எனும் குமரன் தங்கராஜன்.
விஜய் டிவி-யின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. குடும்ப நாடகமான இதில் ஹூரோ போன்ற கேரக்டரில் நடித்து வருபவர் கதிர் எனும் குமரன் தங்கராஜன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் கூட்டு குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் சேர்ந்து ஒரு மளிகை கடை நடத்துவது தான் கதை. கூட்டு குடும்பத்தின் மனைவிகளால் வரும் பிரச்சனைகள், மளிகை கடை நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் என தொடர்ந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியல்.
சென்னையில், சேர்ந்த குமரன் தங்கராஜன் நடன கலைஞராக சின்னத் திரையில் கால் பதித்துள்ளார். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 மற்றும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில், நடன கலைஞராக பங்கேற்றுள்ளார்.
மேலும் அதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் மானாட மயிலாட சீசன் 4 மற்றும் சீசன் 5, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளாக பங்கேற்றார். இதனால் சின்னத்திரையில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் விஜய் டிவியில் 2017 ஆம் ஆண்டு மாப்பிள்ளை என்ற தொடரில் நடிப்பில் அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜா என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர்கள் அமைந்தது. சகோதரர்கள் பாசம் நிறந்த இந்த குடும்ப சீரியலில் 3-வது சகோதரராக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பல விதத்தில் நடித்து முக்கிய இடம் பிடித்து வருகிறார்.
இந்த சீரியலில் முல்லை கதாபத்திரத்தில் இவரது காதல் காட்சிகளுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். முல்லை என்னும் கதாபாத்திரத்தில் முன்பு விஜே சித்ரா நடித்து வந்தார். தற்போது இந்த கேரக்ரில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். இந்த ஜோடி பாண்டியன் ஸ்டோர்ஸ் அடையாளம் என்றே சொல்லி வருகின்றனர். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கலாட்டா நட்சத்திர விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த ஜோடிக்கான விருதை விஜே சித்ராவும் - கதிரும் பெற்றனர்.
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாமல் படங்களிலும் குமரன் நடித்து வருகிறார். அடுத்து ஜோடி பன் அன்லிமிட்டெட் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் விருந்தினராகவும் கலந்துகொண்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். அதன்பிறகு இவர் தற்போது சில படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டு வரும் நியலியில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு குமரனின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பார்த்துவிட்டு ரசிகர்கள், குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகப்போவதாக கருதி வருத்தமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.