மேலும் அறிய

Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. சென்சார் போர்டை விளாசித் தள்ளிய விஷால் - இப்படியா சொன்னாரு?

விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரத்தில் தணிக்கை வாரியத்தை நடிகர் விஷால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இந்த படம் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தால் தற்போது வரை வெளியாகவில்லை. 

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பிறகு நடிகர் விஷால் இதுதொடர்பாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

சென்சார் போர்டில் நிற்போம்:

"ஒருத்தர் சென்று குரல் கொடுப்பது முக்கியம் இல்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சென்று குரல் கொடுக்கிறார் என்று இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள மொத்த பேரும், 1519 பேரும் சென்சார் போர்ட் முன்பு நின்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது நடக்கும். தோற்பவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அது செய்தால் கண்டிப்பாக செழிப்பாக இருக்கும். 

புகார் எடுப்பதற்கு நாங்கள் காவல்துறை இல்லை. நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இருக்கிறது. இத்தனை நீதிமன்றங்கள் இருக்கும்போது நாங்கள் எப்படி தலையிட முடியும்? நீதிமன்றத்திற்கு போகும்போது நாங்கள் தடுக்க முடியாது. 

உடன்பாடு இல்லை:

எனக்கு கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பற்றி தெரியாது. ஒருவேளை அவர்கள் வந்திருந்தால் ஏதாவது நடந்திருக்கலாம். இது உயர்நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினை. உயர்நீதிமன்றத்திற்குச் சென்று நீதிபதியை எப்படி கேள்வி கேட்க முடியும்?

தணிக்கை வாரியம் என்பது ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை 7 கோடி மக்கள் சார்பாக 4 அல்லது 5 பேர் உட்கார்ந்து எத்தனை கட் கொடுக்கலாம்? என்ன பார்க்க வேண்டும்? என்ன பார்க்கக்கூடாது? என்று முடிவு செய்கிறார்கள். அதுவே எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அது விதி. விதிமுறைகளுக்கு ஏற்றாற்போல நாம் நடந்து கொள்ள வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார்.

சிக்கலில் ஜனநாயகன்:

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு கோட் மற்றும் ஜனநாயகன் ஆகிய இரு படங்களில் நடித்தார். கோட் படம் வெளியாகிய நிலையில், ஜனநாயகன் கடும் சிக்கலைச் சந்தித்துள்ளது. தெலுங்கு திரைப்படமான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். 

விஜய்யின் அரசியல் வருகைக்கு ஏற்றாற்போல படத்தில் ஏராளமான காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மதத்தை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இதுவரை தணிக்கைச் சான்றிதழ் பெற முடியாமல் தயாரிப்பு தரப்பு உள்ளனர். ஜனநாயகன் பட வழக்கு நீதிமன்றத்திலும் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

ஜனநாயகன் படத்தில் மமைதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget