விஜய் சேதுபதியை தாக்கவில்லை... உடன் வந்தவர் மீதே தாக்குதல்: காரணம் என்ன? முழுத் தகவல் இதோ!
நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது.
![விஜய் சேதுபதியை தாக்கவில்லை... உடன் வந்தவர் மீதே தாக்குதல்: காரணம் என்ன? முழுத் தகவல் இதோ! Is it true that actor Vijay Sethupathi was attacked bangalore airport விஜய் சேதுபதியை தாக்கவில்லை... உடன் வந்தவர் மீதே தாக்குதல்: காரணம் என்ன? முழுத் தகவல் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/03/229ef931cc20411c8ce7edd0de848eb1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது ஒருவர் தாக்குவதுபோல வீடியோ ஒன்S வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக அந்த மனிதர் அவரை தாக்கினார் என்று எந்த விவரமும் வெளியாகவில்லை. விஜய் சேதுபதி தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வேகவேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், விமான நிலையத்தில் சிஆர்பிஎப் பாதுகாப்பில் செல்லும் விஜய்சேதுபதியை பின் தொடர்ந்து வந்த ஒருவர் ஓங்கி மிதிக்கிறார். உடனே அவருடன் வந்த சிலர், அந்த நபரை பிடிக்க முயற்சிக்கின்றனர். நிலை தடுமாறிய விஜய் சேதுபதி, அந்த நபரை நோக்கி ஓடுகிறார். தடுக்க ஓடுகிறாரா... அல்லது விசாரிக்க ஓடுகிறாரா... அல்லது பதில் தாக்குதலுக்கு ஓடுகிறாரா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், விஜய்சேதுபதி மீது அந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பெங்களூருவி உள்ள தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. விஜய்சேதுபதி உடன் பயணித்த நடிகர் மகாகாந்தி, அவரது சக பயணி ஜான்சன் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நடந்த தாக்குதலே இது. ஜான்சன் தாக்கியது மகா காந்தியை மட்டுமே. விஜய் சேதுபதியை அல்ல. சிலர் இதை கன்னட மற்றும் தமிழர்கள் இடையே நடைபெறும் தாக்குதல் என சித்தரிக்கின்றனர் முற்றிலும் தவறான செய்தி அது. இதுவரை இந்த விவகாரத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளராக உண்மை செய்தியை பதிவு செய்கிறேன்’ எனப்பதிவிட்டுள்ளார்.
நடிகர் #விஜய்சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. விஜய்சேதுபதி உடன் பயணித்த நடிகர் மகாகாந்தி அவரது சக பயணி ஜான்சன் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் தாக்குதலே இது. ஜான்சன் தாக்கியது மகா காந்தியை மட்டுமே. விஜய்சேதுபதியை அல்ல#VijaySethupathi #Bengaluru pic.twitter.com/jRvcVuIA1A
— Senthil Nathan A (@senthu_ap) November 3, 2021
சிலர் இதை கன்னட மற்றும் தமிழர்கள் இடையே நடைபெறும் தாக்குதல் என சித்தரிக்கின்றனர் முற்றிலும் தவறான செய்தி அது. இதுவரை இந்த விவகாரத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளராக உண்மை செய்தியை பதிவு செய்கிறேன். #Bangalore
— Senthil Nathan A (@senthu_ap) November 3, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)