Annaatthe | ஓடிடியிலும் வெளியாகப்போகும் அண்ணாத்த ? - எப்போ தெரியுமா?
படையப்பா, முத்து படங்களில் வரிசையில் பல நட்சத்திரங்களில் சங்கமத்தால் உருவாகியுள்ளது ‘அண்ணாத்த’.
இந்திய திரையுலகினரால் தலைவா என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் , தீபாவளி சரவெடியாக களமிறங்கவுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’ இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நாயகிகள் மட்டுமல்லாது 90 களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த குஷ்பு , மீனா உள்ளிட்ட நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதும் , இமான் இசையமைத்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை அதகளப்படுத்தியது நாம் அறிந்ததே . இந்நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி , 21 நாட்களுக்கு பிறகு ஒடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை பிரபல ஒடிடி தளம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Saravedi saththam arangam muluka therika 🔥#AnnaattheTeaser crosses 5Mil+views
— Sun Pictures (@sunpictures) October 15, 2021
▶️ https://t.co/MPUZxEvDnw@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #Annaatthe pic.twitter.com/jaqOHPVk1F
#Marudhaani: #AnnaattheThirdSingle is here!
— Sun Pictures (@sunpictures) October 18, 2021
▶ https://t.co/h87za3lRPP@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @AzizNakash @anthonydaasan @vandanism #ManiAmuthavan @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals
கடந்த 4ஆம் தேதி ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அறிமுக பாடல் வெளியானது. இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். அதன்பின், இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது. ஸ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம் குரலில் மொலோடி பாடலான இதில், ரஜினிகாந்த் நயன்தாராவுடன் திரையில் டூயட் பாடியுள்ளார்.
Neruppu kannodu vaaraar 🔥
— Sun Pictures (@sunpictures) October 24, 2021
#VaaSaamy ▶ https://t.co/yABRyaVKEe
#Annaatthe4thSingle @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #MukeshMohamed #NochipattiThirumoorthi #KeezhakaraiSamsutheen #ArunBharathi @AntonyLRuben @dhilipaction @vetrivisuals
கடந்த 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘வா சாமி’ பாடலையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சாட்ட எடுத்துக்கிட்டு…. வேட்டி மடிச்சிகிட்டு… எதிரிய எருவென எரிடா… என துவங்கும் அந்த பாடலை அருண்பாரதி எழுத்தில் முகேஷ் முகமது, கீழக்கரை சம்சுதின், நொச்சிப்பட்டி திருமூர்த்தி உள்ளிட்ட பாடகர்கள் பாடியுள்ளனர்.மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் அண்ணன் தங்கை பாசம் , கூட்டு குடும்பம் , உறவுகளின் பின்னல்கள் என்ற ஸ்டீரியோ டைப் கதைக்களத்தை கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆனாலும் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. படையப்பா, முத்து படங்களில் வரிசையில் பல நட்சத்திரங்களில் சங்கமத்தால் உருவாகியுள்ளது ‘அண்ணாத்த’. படத்தில் ரஜினியின் கெட்டப்பும் தோற்றமும் பழைய ரஜினியை நினைவுப்படுத்துவதாக அமைவதுதான் ‘டாப் நாச்’ போங்க!