Irfan's View சேனலை நீக்கிய யூட்யூப்... விளக்கம் அளித்த இர்ஃபான்..
Irfans View Youtube Channel Terminated: யூட்யூப் நிறுவனத்தின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் அவரது யூட்யூப் சேனல் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
பிரபல யூட்யூப் சேனலனான இஃபான்ஸ் வ்யூ யூட்யூப் சேனல்(Irfans View Youtube Channel ) நீக்கப்பட்டுள்ளது. யூட்யூபின் விதிமுறைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிரபல உணவு விமர்சகரான இர்ஃபான், தனது யூட்யூப் சேனல் மூலம் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடு உணவுகளையும் சுவைத்து ரிவ்யூ தெரிவித்து வந்த அவரை நிறையப் பேர் பின்பற்றி வந்தனர். இந்நிலையில், யூட்யூப் நிறுவனத்தின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் அவரது யூட்யூப் சேனல் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், அவரது ஃபாலோவர்ஸ் அதிர்ச்சியில் உள்ளனர்.
My channel terminated - What happened? https://t.co/jAMRk1aAzZ via @YouTube
— Irfan's view (@md_irfan10) March 29, 2022
@YouTubeCreators @YTCreatorsIndia
இந்நிலையில், தனது பர்சினல் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஸ்டோரி பதிவிட்டிருக்கும் அவர், ”திடீரென யூட்யூப் எங்களது சேனலை ஏன் நீக்கியது என தெரியவில்லை.. இதை சரிசெய்ய பார்த்து கொண்டிருக்கோம்” என தெரிவித்திருக்கிறார். மேலும், தனது இன்னொரு யூட்யூப் சேனலில் இருந்து வீடியோ பதிவேற்றிருக்கும் அவர், ”கடந்த 5-6 ஆண்டுகளாக இந்த யூட்யூப் சேனலுக்காக பணியாற்றி வருகிறோம். ஆனால், இப்போது விதிமுறைகளை மீறி இருப்பதாக யூட்யூபில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி, மீண்டும் இந்த சேனல் கிடைக்குமா அல்லது வேறு சேனல் ஆரம்பிக்க வேண்டுமா என்பது விரைவில் தெரிய வரும். பழைய சேனலை மீட்டு விடலாம் என பலரும் சொல்லி வருவது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், சரியாக என்ன பிரச்னை என தெரியாமல் என்னால் இப்போது எதும் சொல்ல முடியவில்லை. 48 மணி நேரத்திற்கு நம்மால் எதுவும் சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான வீடியோக்கள் அந்த சேனலில் இருக்கிறது. அவற்றில் சிலது பேக்-அப் கூட என்னிடம் இல்லை” என தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்