Iravin Nizhal: அமேசானில் இல்லாத இரவின் நிழல் மேக்கிங்.. சலசலப்பான சமூகவலைதளம்.. அப்டேட் கொடுத்த பார்த்திபன்!
உலகின் முதல் நான் சீனியர் சிங்கில் சாட் திரைப்படம் 'இரவின் நிழல்' சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இன்று நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபனின் உலகின் முதல் நான் சீனியர் சிங்கில் சாட் திரைப்படம் என்று வெளியான இரவின் நிழல் திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. விரைவில் அந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ (Documentary) வெளியிடப்படும் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியான இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இரவின் நிழல் படம் தான் உலகிலேயே முதல் “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
மகிழ்ச்சியை கூட…
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 12, 2022
அறிவித்து அனுபவிக்க முடியவில்லை.
அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்!
Please
நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot)
ஆதரவை தர வேண்டுகிறேன்!
நன்றியுடன்https://t.co/6i5di3H7RA pic.twitter.com/wEHlzlWVeS
ஆனால் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் fish and cat என்ற படம் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றும், இரவின் நிழல் இல்லை என்றும் தெரிவித்து பார்த்திபனை குற்றம்சாட்டினார். இதற்கிடையில் இரவின் நிழல் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.
அதேசமயம் முறையான அறிவிப்போடு வந்திருக்கலாம் என்ற தனது ஆதங்கத்தையும் வீடியோ வாயிலாக அவர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதிலும் கூட உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல்தான் என அவர் கூறியிருந்தார்.
ஆனால் அமேசான் ப்ரைம், தனது தளத்தில் இப்படம் உலகின் 2வது நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் என தெரிவித்து இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் தியேட்டரில் இரவின் நிழல் படத்தின் கதைக்குள் செல்வதற்கு முன் காட்டப்படும் மேக்கிங் காட்சிகள் இடம் பெறவில்லை. இதனை குறிப்பிட்டு பலரும், சமூக வலைத்தளத்தில் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதற்கு விளக்கம் அளித்து நடிகர் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இனிய மாலை வனக்கம் pic.twitter.com/2hLlB3UPl1
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 12, 2022
இந்நிலையில் இன்று நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அன்பு நண்பர்களே,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 18, 2022
குறை நிறைகளை மீறி ஒரு முதல் சாதனை முயற்சியினை உளமாற பாராட்டி ஊக்குவித்தமைக்கு உயிரார நன்றி!இரவின் நிழல் making/documentary சமீபத்தில் நீங்கள் விரும்பும் ஒரு ஊடகத்தில் வரும்(or)உங்கள் ஆதரவோடு Radhakrishnan parthiban YouTube channel-லில் மிக சமீபத்தில் அரங்கேறும்! pic.twitter.com/K88wZbWg7N
அதில், ‘’அன்பு நண்பர்களே, குறை நிறைகளை மீறி ஒரு முதல் சாதனை முயற்சியினை உளமாற பாராட்டி ஊக்குவித்தமைக்கு உயிரார நன்றி!இரவின் நிழல் மேக்கிங் டாக்குமென்டரி விரைவில் நீங்கள் விரும்பும் ஒரு ஊடகத்தில் வெளியாகும் அல்லது ரசிகர்களின் ஆதரவோடு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் யூடியூப் சேனலில் மிக சமீபத்தில் அரங்கேறும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

