மேலும் அறிய

Chennai Electric Train Issue: சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கு ஷாக்.! மேலும் குறைக்கப்பட்ட சேவை எண்ணிக்கை; அவதி

சென்னையில் மின்சார ரயில்கள் ஏற்கனவே குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ள நிலையில், தற்போது எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது ரயில்களின் சேவை எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகளை பல்வேறு கட்டங்களாக ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த 10-வது மற்றும் 11-வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால், கடந்த 20-ம் தேதியில் இருந்து, 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு வருகிறது.

சேவைகள் குறைப்பு - ரயில்வே வேண்டுகோள்

இந்த பணிகள் காரணமாக, கடந்த 5 நாட்களாக பொதுமக்கள், குறிப்பாக மின்சார ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதன் பலனாக ஒரு சிறந்த புதிய எழும்பூர் ரயில் நிலையத்தை மக்கள் பெற முடியும் என்றும் ரயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனிடையே, புறநகர் மின்சார ரயில் பயணிகளின் வசதிக்காக, மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பேருந்து சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் குறைக்கப்பட்ட ரயில் சேவைகள்

இந்நிலையில், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, ஏற்கனவே 204-ஆக இருந்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எழும்பூர் -  பரங்கிமலை, எழும்பூர் - கூடுவாஞ்சேரி, எழும்பூர் - செங்கல்பட்டு இடையே கட் சர்வீஸ் ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரிலிருந்து செல்லும் ரயில்கள், சேத்துபட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், எழும்பூருக்கு வரும்போது, பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டில் நிற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி - தாம்பரம் ரயில், செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஏற்கனவே சிரமத்தை அனுபவித்து வந்த மின்சார ரயில் பயணிகள், தற்போது மேலும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

 

தலைப்பு செய்திகள்

Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
கனமழைக்கு தயாராகும் சென்னை: மக்கள் பாதிக்காத வண்ணம் பணிகள் - ககன் தீப் சிங் பேடி
கனமழைக்கு தயாராகும் சென்னை: மக்கள் பாதிக்காத வண்ணம் பணிகள் - ககன் தீப் சிங் பேடி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Embed widget