மேலும் அறிய

TN Voters List: சென்னையை கிழித்த SIR - சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி

TN Voters List Election 2026 DMK: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது.

TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது, சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பிரச்னையாக மாறக்கூடும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளுக்குப் (SIR) பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, SIR-க்கு முன்பாக 6.41 கோடியாக இருந்த மாநிலத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 5.67 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 74 லட்சம் பேரின் பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோரின் பதிவுகள் இரட்டை வாக்குரிமை, புலம்பெயர்வு மற்றும் இறப்பு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வாக்காளர்களை இழந்த மாவட்டமாக தலைநகர் சென்னை உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வாக்காளர்கள் விவரம்:

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பிறகு, சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து நான்காயிரத்து 694 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 28 லட்சத்து 30 ஆயிரத்து 936 ஆக குறைந்தது. அதாவது சுமார் 3 பேரில் ஒருவர் என, மொத்தம் 11 லட்சத்து 73 ஆயிரத்து 758 வாக்காளர் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை இழந்த, முதன்மையான 5 சட்டமன்ற தொகுதிகளும் சென்னை மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே, சென்னையில் உள்ள பல தொகுதிகளில் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டன. அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் தற்போது பல ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டது, வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகிறது.

அதிக வாக்காளர்களை இழந்த தொகுதிகள்

தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வாக்காளர்களை இழந்த தொகுதியாக அண்ணா நகர் உள்ளது. தேர்தல் ஆணைய தரவுகளின்படி, 99 ஆயிரத்து 20 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பு இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இருந்து, 35 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் ஆயிரம் விளக்கு, கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதேநேரம், எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் வேளச்சேரி தொகுதியில் இருந்து மட்டும், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 829 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

  • அண்ணா நகர் - 99,020 வாக்காளர்கள் நீக்கம்
  • ஆயிரம் விளக்கு -  84,466 வாக்காளர்கள் நீக்கம்
  • கொளத்தூர் - 83,402 வாக்காளர்கள் நீக்கம்
  • வில்லிவாக்கம் - 80,702 வாக்காளர்கள் நீக்கம்
  • தியாகராய நகர் - 80,554 வாக்காளர்கள் நீக்கம்

சென்னை - தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்:

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் SIR-க்கு முன்பாக இருந்த வாக்காளர் விவரங்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள், இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் மற்றும் நீக்கப்பட்ட பதிவுகள் என ஒட்டுமொத்த எண்ணிக்கை விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதுபோக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதிகளில் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் SIR-க்கு முன்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இறுதி வாக்காளர் எண்ணிக்கை நீக்கப்பட்ட பதிவுகள் 2021 தேர்தலில் வெற்றி வித்தியாசம்
ஆர்.கே. நகர் 2,35,272 1,78,356 1,95,856 39,416 42,479 வாக்குகள்
பெரம்பூர் 2,97,526 2,00,181 2,22,792 74,734 54,976 வாக்குகள்
கொளத்தூர் 2,90,653 1,86,841 2,07,251 83,402 70,384 வாக்குகள்
வில்லிவாக்கம் 2,40,466 1,42,706 1,59,764 80,702 37,237 வாக்குகள்
திரு.வி.க. நகர் 2,23,571 1,64,528 1,78,793 44,778 55,013 வாக்குகள்
எழும்பூர் 1, 97,465 1,22,607 1,34,879 62,586 38,768 வாக்குகள்
ராயபுரம் 1,98,576 1,46,865 1,56,931 41,645 27,779 வாக்குகள்
துறைமுகம் 1,80,341 1,10,517 1,16,896 63,445 27,274 வாக்குகள்
சேப்பாக்கம் 2,40,087 1,50,846 1,63,886 76,201 69,355 வாக்குகள்
ஆயிரம் விளக்கு 2,38,374 1,41,393 1 ,53,908 84,466 32,462 வாக்குகள்
அண்ணா நகர் 2,80,422 1,62,135 1,81,402 99,020 27,445 வாக்குகள்
விருகம்பாக்கம் 2,85,947 1,75,123 1,96,536 89,411 18,367 வாக்குகள்
சைதாப்பேட்டை 2,73,717 1,86,489 2,00,697 73,020 29,408 வாக்குகள்
தி,.நகர் 2,35,497 1,39,498 1,54,943 80,554 137 வாக்குகள்
மயிலாப்பூர் 2,69,260 1,81,592 1,94,731 74,529 12,633 வாக்குகள்
வேளச்சேரி 3,17,520 1,89,999 2,11,691 1,05,829 4,352 வாக்குகள்

சிட்டியில் திமுகவின் ஆட்டம் ஓவர்?

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாக களம் கொண்டு, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் தன்வசப்படுத்தியது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோரோடு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா. சுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர். அதேநேரம், 14 தொகுதிகளில் தற்போது நீக்கப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை காட்டிலும், மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தியாகராய நகரில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்திலும், வேளச்சேரியில் 4,352 வாக்குகள் வித்தியாசத்திலுமே திமுக வெற்றியை ஈட்டியுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சென்னை மாவட்டத்தில் திமுகவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருமா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்டார் தொகுதிகள்

  • முதமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலிருந்து 83,402 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
  • துணை முதலமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியிலிருந்து 76,201 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
  • அமைச்சர் மா.சுப்ரமணியனின் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 73,020 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
  • அமைச்சர் சேகர்பாபுவின் துறைமுகம் தொகுதியிலிருந்து 63,445 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
Embed widget