RK Suresh | ‛புதுப்பேட்டைக்கு வாங்குன அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தேன்...’ -சினிமா எண்ட்ரி குறித்து ஆர்.கே.சுரேஷ் ஓபன் டாக்!
‛‛அதோடு பிசினஸ் பக்கம் போயிட்டேன். இன்னொரு புறம் கல்யாணம் ஆயிடுச்சு. வேறு மாதிரி மாறியிடுச்சு வாழ்க்கை. அதன் பிறகு தான் தயாரிப்பாளர் ஆனேன்,’’
பிசினஸ் மேன், தயாரிப்பாளர், நடிகர் என முகங்களை கொண்டவர் ஆர்.கே.சுரேஷ். சம கால தமிழ் சினிமாவின் விருப்ப வில்லன். நல்ல பின்னணியும், தொழில் அமைப்பும் கொண்ட குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு அவர் வந்தது எப்படி? வாய்ப்புகள் கிடைத்தது எப்படி? இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ...
‛‛புதுப்பேட்டை ஆடிசன் போனேன். செல்வராகவன் சார் பார்த்து செலக்ட் பண்ணிட்டாரு. அப்போ, நான் 6 பேக் வெச்சு முரட்டு தனமா இருப்பேன். அட்வான்ஸ் கொடுத்தாங்க... ஒரே சந்தோசம். வீட்டுக்கு வந்து, ‛செல்வராகவன் சார் படத்துல நடிக்கப் போறேன்னு...’ எல்லாரிடமும் சொன்னேன். ரொம்ப பெருமையா இருந்துச்சு. அப்புறம், என்னோட கதாபாத்திரம் பத்தி செல்வராகவன் சார் சொன்னார். ‛இது தான் கதாபாத்திரம்... ஒரு பெரிய கேங்... அதுல நீயும் ஒருவன்,’ அப்படின்னு சொன்னாரு. சுத்திப்பார்த்தா, என்னை விட பயங்கர உடம்போடு நிறைய பேர் இருந்தாங்க. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துடுனு அப்பா சொல்லிட்டாரு. ‛நீ தான் எல்லாம் கத்துட்டீயே... கொஞ்சம் பொறுமையா இருக்கு... அப்பா உன்னை வெச்சு ஹீரோவா ஒரு படம் பண்றேன்னு...’ அப்பா என்னிடம் சொன்னார். அவருக்கு, பத்தோடு பதினொன்னா பையன் நடிக்கிறதுல விருப்பம் இல்லை.
அதோடு பிசினஸ் பக்கம் போயிட்டேன். இன்னொரு புறம் கல்யாணம் ஆயிடுச்சு. வேறு மாதிரி மாறியிடுச்சு வாழ்க்கை. அதன் பிறகு தான் தயாரிப்பாளர் ஆனேன். தாரை தப்பட்டை ரிலீஸ் முன்னாடியே, முத்தையா என்னை மருது படத்திற்கு புக் செய்துவிட்டார். தாரை தப்பட்டை ரிலீஸ் ஆவதற்கு 2 மாதத்திற்கு முன், மருது படத்தில் எனக்கான கெட்டப்பை அவர் சொல்லிவிட்டார். முத்தையா அண்ணன் மீது எனக்கு ரொம்ப நம்பிக்கை இருந்தது. அவர் வில்லன்களுக்கு நிறைய முக்கியத்துவம் தருவார். அதனால், நான் யோசிக்காமல் ஓகே சொன்னேன்.
முதல் நாள் சூட்டிங் போனப்போ, ஜாலியா போச்சு. அப்புறம் தாரை தப்பட்டை ரீலிஸ் ஆன பின், நம்மை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை உள்வாங்குனேன். அதை அப்படியே மருது படத்தில் எனக்கு பயன்படுத்திக் கொண்டேன். தாரை தப்பட்டையில் என் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது, விஜய் சேதுபதி தான். ஆனால், அவர் அந்த சமயம், ஹீரோவாக நடித்ததால், அவரால் வரமுடியவில்லை. ஆனால், அவர் எனக்கு சில ரெபரென்ஸ் டிப்ஸ் செய்தார். அதன் படி இருவரை நான் எனக்கு ரெபரென்ஸ் ஆக எடுத்துக் கொண்டேன். ஒருவர் எம்.ஆர்.ராதா, மற்றொருவர் ரகுவரன். இவர்கள் இருவரை பார்த்து தான், என் வில்லன் கதாபாத்திரங்களை வடிவமைத்துக் கொண்டேன்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்