”விஜய் கூட நடிச்சேன்... தியேட்டர்ல பார்த்தா அந்தக் காட்சியே இல்லை; தூக்கிட்டாங்க” - நடிகை ஸ்ரீரஞ்சனி
படத்தில் இவர் நடிகை நித்யா மேனனுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் கதாப்பாத்திரத்துக்கு அம்மாவாக நடித்த குஷியில் பேசத் தொடங்குகிறார் குணச்சித்திர நடிகர் ஸ்ரீரஞ்சனி. அவர் பேசியதில் இருந்து...
View this post on Instagram
“தனுஷ் உடைய பெரிய ஃபேன் நான். அவர் நடிக்கும் படம் என்பதால் கதை எதுவும் கேட்காமல் ஓகே சொல்லிவிட்டேன். ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் தெரிந்தது அதில் தெலுங்கு தமிழ் என இரண்டும் பேசி நடிக்க வேண்டும் என்று. ஆனால் எப்படியோ பேசி நடித்துவிட்டேன். முதல் ஷாட்டே ஷோபனாவை தோசைத் திலுப்பியால் அடித்து எழுப்புவதுதான். சீன் பல டேக்குகள் வாங்கியது. நித்யா மேனன் வேற ‘நீங்க பார்க்க என் அம்மா மாதிரி இருக்கிங்க’ என சொன்னதும் எனக்கு ஒரே குஷியாகிவிட்டது. இந்த பக்கம் தனுஷ் வேற ‘நல்லா ரெண்டு போட்டு எழுப்புங்க’ என நக்கலடிக்கிறார். எப்படியோ ஒருவழியாக அந்தக் காட்சியை எடுத்தோம். என் வாழ்வில் திருச்சிற்றம்பலம் என்றால் அது எனது இரண்டு மகன்கள்தான். அதுவும் பெரிய மகன் தற்போது சினிமாவில் எண்ட்ரி ஆவதால் நானும் அவரும் நிறைய சினிமா தொடர்பா பேசிக்கொள்வோம்.எனக்கு பிள்ளைகளை கண்டிப்பாக வளர்க்கத் தெரியாது. நான் பிள்ளைகளிடம் ரொம்பவே ஜாலி டைப். என் கணவர் கூட அதை அடிக்கடி சொல்லுவார்.” என சொல்லும் ஸ்ரீரஞ்சனி விஜய்யுடன் ஒரு படத்தில் நடிப்பது மிஸ்ஸானது மிகவும் வருத்தமளிப்பதாக இருந்ததாகக் கூறுகிறார்.
”விஜய்யுடன் இணைந்து உதயா படத்தில்தான் முதன்முதலில் நடித்தேன். அதன்பிறகு போக்கிரி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதல் காட்சியே விஜய்யுடன் ஆட்டோவில் பயணிக்கும் சீன். ஆனால் திரையரங்கில் போய் பார்த்தால் அந்தக் காட்சியை நீக்கி இருந்தார்கள். இப்படி கஷ்டப்பட்டு நடிக்கும் காட்சிகள் நமக்கு சொல்லாமலே நீக்கிவிடுவார்கள். வருத்தமாகத்தான் இருக்கும். பட் இட்ஸ் ஓகே!” என்கிறார் அவர்.