Vidaamuyarchi: விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி - வைரலாகும் மீம்ஸ்!
Vidaamuyarchi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் கொண்டாடி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஸ்டோரி வைரலாகி வருகிறது
விடாமுயற்சி கதை:
ஹாலிவுட்டில் 1997 ஆம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ளது விடாமுயற்சி. அர்ஜூன் கயல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் தான் இன்னொரு நபரோடு உறவில் இருப்பதாகவும் அர்ஜூனிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் கயல். கயலை அவள் பெற்றொர் வீட்டில் விட்டுவர போகும் வழியில் அவரை யாரோ கடத்திச் செல்கிறார்கள். எந்த வித தடமும் இல்லாமல் தனது மனைவியை தேடிச் செல்லும் அர்ஜூன் பல போராட்டங்களை எதிர்கொள்கிறார். கயலை கடத்தியது யார். அவளை அர்ஜூன் காப்பாற்றினாரா ? இருவரும் சேர்ந்தார்களா பிரிந்தார்களா என்பதே விடாமுயற்சி படத்தின் கதை.
Director Vignesh Shivan Insta Story🥱👀 pic.twitter.com/8z5Gy5IXmt
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 6, 2025
அஜித் ரசிகர்கள் படத்தை ஒருபுறம் கொண்டாடி வருந்தாலும், அஜித் படத்திற்கான மாஸ் எலமெண்ட்ஸ் இல்லை என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திரைப் பிரலங்களும் விடாமுயற்சி பார்த்துவிட்டது ஹிட் படம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி:
லைகா தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. பின்னர் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட ஸ்கிரிப்ட் பிரச்னைகளால் படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகுவதாக அறிவித்தார். இதற்கடுத்து அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் அஜித் கவனம் செலுத்தினார். இயக்குநர் விக்னேஷ் சிவன் எல்.ஐ.கே. படத்தினையும் இயக்கி வருகிறார். இது குறித்து விக்னேஷ் சிவன் அளித்த விளக்கத்தில் ' ‘ என்னை அறிந்தால்’ படத்தின்போது அஜித் சாரை சந்தித்தபோது, அவர் ‘நானும் ரெளடிதான் படம் பலமுறை பார்ததாக தெரிவித்தார். மிகவும் பிடித்திருந்ததாக கூறினார். அதுமாதிரியான ஸ்க்ரிப்ட் எழுதுங்கள் என்றார். நானும் அவருக்காக ஒரு கதை எழுதினேன். அது தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. தயாரிப்பாளர்கள் நிறைய மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ' என படத்திலிருந்து விலகியது தொடர்பாக தெரிவித்திருந்தார்.
Vignesh Shivan right now : pic.twitter.com/HiJ9CuQNHb
— 🥶. (@KuskithalaV6) February 6, 2025
பலரும் மீம்ஸ் உருவாக்கி கமெண்ட் செய்து வருகின்றனர். விடாமுயற்சி திரைப்படம் அஜித் படம்போல இல்லை; மாஸ் சீன் ஏதும் இல்லை என ஒருதரப்பினர் தெரிவித்து வருகின்றனர். படத்தில் அனிருத் இசை இருப்பதாலேயே ஓரளவிற்கு உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடாமுயற்சி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
Vignesh Shivan கூட ஒரு decent entertainer குடுத்துருப்பான் டா டேய் 😭 pic.twitter.com/iBN4qu8rwK
— Millionaire 𝕏 (@Millionaire_X_) February 6, 2025
இந்நிலையில், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. விக்னேஷ் சிவன் பதிவில், 'சில நேரங்களில் எதுவும் எப்படி ஒர்க் ஆகும் என்பதை பற்றி கவலைப்படுவதை நிறுத்தும்போது மேஜிக் நிகழும்.” என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு, நல்லது செய்தால் அது மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். ப்ராசனை நம்புங்கள்.” என்றும் குறிப்பிடுள்ளார்.
View this post on Instagram
இதை ரசிகர்கள் அஜித் படத்தை இயக்க முடியாமல் போனது. அவரிடம் கொடுத்திருந்தால் கொஞ்சம் நல்ல படமாக கொடுத்திருப்பார் என்றும் சிலர் எக்ஸ்தளத்தில் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க..

