Netflix Release: அக்கா முதல் டெஸ்ட் வரை!

Image Source: Instagram/ @netflix_in

2025-ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. மண்டலா மர்டர்ஸ்

கோபி புத்ரன் மற்றும் மானன் ராவத் இயக்கியுள்ள க்ரைம் த்ரில்லர் வெப் தொடர். வாணி கபூர், வைபவ் ராஜ் குப்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

2. டப்பா கார்டெல்

ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ள இத்தொடர், தானேவில் வாழும் ஐந்து சராசரி குடும்ப பெண்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது.

3. க்ளோரி

கரண் அன்ஷுமன், கர்மான்யா அஹுஜா இயக்கத்தில் வெளியாகவுள்ள இத்தொடர் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

4. அக்கா

தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

5. சூப்பர் சுப்பு

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் முதல் தெலுங்கு வெப் தொடர். மல்லிக் ராம் இயக்கியுள்ள இத்தொடரில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.

6. டெஸ்ட்

சசிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்துள்ளனர். இப்படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டுள்ளது

இவற்றை தவிர ஷாருக்கான் மகன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு, உள்ளிட்ட பல படங்கள் மற்றும் வெப் தொடர்களின் அறிவிப்பையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.