Samantha | ‛என்னை முழுசா ஏத்துக்கனும்னு நினைக்கல; ஆனா....” - நடிகை சமந்தா ஓபன் டாக்!
”காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் எனக்கும் நயன்தாராவிற்கும் சமமான கதாபாத்திரம்தான். விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் எனக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டனர்”
கோலிவுட் , டோலிவுட் என கலக்கி வரும் நடிகை சமந்தா விரைவில் பாலிவுட் பக்கமும் கால் பதிக்க தயாராகிவிட்டார். டாப்ஸி தயாரிக்கும் புதிய படத்தில் அவர் நடிப்பார் என செய்திகள் வெளினாது. இந்த நிலையில் புஷ்பா படத்திலும் முதன் முறையாக ஐடம் நம்பரில் நடனமாடியுள்ளார். இந்த நிலையில் பிரபல ELLE INDIA ஃபேஷன் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் சமந்தா இடம் பிடித்திருக்கிறார். இதற்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட்களை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
அப்போது ELLE INDIA நிறுவனத்திடம் சமந்தா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் தனது கதாபாத்திர தேர்வு குறித்து பகிர்ந்த சமந்தா , தனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாக இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்கும் என தெரிவித்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த சமந்தா, பொதுவாக இரண்டு ஹீரோயின்கள் படம் என்றால் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு நடிப்பார்கள், யாருக்கு அதிகமாக நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கிறது என பார்ப்பார்கள். ஆனால் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் எனக்கும் நயன்தாராவிற்கும் சமமான கதாபாத்திரம்தான். நயன்தாரா இருவரும் எனக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டனர் என தெரிவித்துள்ளார்,
View this post on Instagram
சமூக ஊடங்களில் சமந்தாவிற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு. வெவ்வேறு கருத்துகளை கொண்ட மனிதர்களை நான் வரவேற்கிறேன். எல்லோரும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் சற்று அன்பாகவும் இரக்கத்துடனும் நடந்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.தங்களின் ஏமாற்றத்தை மிகவும் நாகரீகமான முறையில் வெளிப்படுத்துமாறு நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. நாக சைத்தன்யாவிடம் விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா ரசிகர்களுக்கு மாறுபட்டவராக தெரிகிறார். ஆன்மீக பயணம் , சுற்றுலா என தனது சோகம் கலைத்த சமந்தா தற்போது கெரியரில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார் என்பது சமூக வலைத்தளங்கள் வாயிலாக நன்றாக தெரிகிறது.