Huma Qureshi: மத்தவங்க கல்யாணம் பண்றாங்கனு நானும் பண்ண வேண்டிய அவசியமில்லை: ஹூமா குரேஷி பளிச்!
இந்தி, மராத்தி மொழி படங்களில் நடித்து வந்த ஹூமா குரேஷி, தமிழ் சினிமாவில் இயக்குநர் ரஞ்சித்தின் காலா படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார்.
சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என்றும், சரியான நபருக்காக தான் காத்திருப்பதாகவும் நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை
மேலும் திரை உலகில் இருக்கும் பிற நடிக, நடிகைகள் திருமணம் செய்துகொள்வதால் தனக்கு அழுத்தம் இல்லை என்றும் ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப்பின் ’கேங்ஸ் ஆஃப் வசேபூர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ஹூமா குரேஷி.
இந்தி, மராத்தி மொழி படங்களில் நடித்து வந்த ஹூமா குரேஷி, தமிழ் சினிமாவில் இயக்குநர் ரஞ்சித்தின் காலா படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடுவர் என பிஸியாக பங்குபெற்று வரும் ஹூமா குரேஷி, முன்னதாக தமிழில் நடிகர் அஜித் உடன் வலிமை படத்தில் நடித்திருந்தார்.
திருமணம் எப்போது?
தற்போது 36 வயதாகும் ஹூமா குரேஷியிடம் திருமணம் எப்போது என்ற கேள்வி தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் முன்னதாக எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள ஹூமா குரேஷி, “நான் சரியான நபரைச் சந்தித்ததும் அவரைக் காதலித்து, அந்த உறவு எனக்குச் சரியென பட்டதும் திருமணம் செய்து கொள்வேன். 'எப்போது நான் திருமணம் செய்துகொள்வேன்' என்ற கேள்வி தொடர்ந்து என்னிடம் எழுப்பப்பட்டு வருகிறது.
சினிமா துறையில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்வதாலோ அல்லது என்னைப் பற்றி தொடர்ந்து கேட்கப்படுவதனாலோ திருமணம் செய்து கொள்வதற்கான அழுத்தத்தை நான் உணரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ப்ரேக் அப்
திரைப்படத் தயாரிப்பாளர் முடாசர் அஜீஸை கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி நடிகை ஹுமா குரேஷி காதலித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாவில் புகைப்படங்கள் பகிர்ந்து வந்ததுடன் , பொது இடங்களிலும் ஒன்றாக தென்பட்டு வந்தனர்.
இதுகுறித்து இருவருமே வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், சென்ற ஆண்டு இருவரும் பிரிந்ததாகவும் தொடர்ந்து நண்பர்களாக இருவரும் இணைந்து படங்களைத் தயாரிப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.
தற்போது ஹூமா சிங்கிளாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த நிலையில் தற்போது அவர்களது உறவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர்வதற்கு இனி வாய்ப்பே இல்லை என தெரிவிக்கின்றனர் நெருங்கிய வட்டாரங்கள்.