Thirumanam fame Sidhu Sid Sherya | தமிழால் முளைத்த காதல்.. இது சித்து ஸ்ரேயாவின் கல்யாண கதை..
ரீலில் தொடங்கி ரியல் ஜோடியாக மாறியிருக்கும் சித்து - ஸ்ரேயாவுக்குள் காதல் மலர்ந்தது எப்படி என்பது தொடர்பான சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய 'திருமணம்’ தொடர் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்து. இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா அஞ்சன் நடித்தார். மங்களூரை பூர்வீகமாக கொண்ட ஸ்ரேயாவிற்கு சித்து தமிழ் மொழியைக் கற்றுக்கொடுத்துள்ளார். இதில் இருவரும் நெருக்கமான நிலையில், இவர்களுக்கிடையில் காதல் முளைத்திருக்கிறது. இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதைப்பற்றி இருவரும் வாய் திறக்கவில்லை.
இதனையடுத்து தாங்கள் காதலித்து வருவதாகவும், தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், தாங்கள் ஆரம்பித்த யூடியூப் சேனல் வாயிலாக அறிவித்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இருவருக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
View this post on Instagram
அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.நடிகை ஸ்ரேயா அஞ்சன், அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram