மைக் மோகன் மார்க்கெட் போனது எப்படி… அஜித் சொன்ன லாஜிக்… இயக்குனர் ராஜ்குமார் பேட்டி வைரல்!
மௌன ராகம் படத்தில் மோகன் மெயின் ரோலில் நடித்து இருந்தார். படத்தில் ரேவதி கடைசி வரை அவரை வேணாம் வேணாம் என்று சொன்னதால் தான் அந்த படத்திற்கு பிறகு மோகனுக்கு மார்க்கெட் குறைந்தது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வருவார் என அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோக்களில் ஒருவர் நடிகர் மோகன். மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தது மட்டும் இன்றி இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. மூடு பணியில் பாலுமகேந்திரா அடிமுகப்படுத்திய இந்த ரேர் ஜெம்மை தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களாக மறந்து இருக்கிறது. இவர் நடிப்பில் வெளியான, 'நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதை தொடர்ந்து வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் செய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி, தமிழ் சினிமாவில் இவரை நிலைக்க செய்தது.
#Ajith Refused #Vijay To Do A Guest Role In #NeeVaruvaiEna Movie pic.twitter.com/3IbjWGwaSC
— chettyrajubhai (@chettyrajubhai) December 20, 2021
80களின் காலகட்டங்களில் வசூல் மன்னனாக திகழ்ந்தவர் நடிகர் மோகன். தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மோகன் உருவம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார். அதன் பின்னர் 9 ஆண்டுகள் கழித்து 1999 ஆம் அன்புள்ள காதலுக்கு என்ற படத்தை இயக்கினர். அதன் பின்னர் இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இப்படி ஒரு நிலையில் மோகன் சினிமாவில் மரக்கட்டில் சரிவை கண்ட காரணம் குறித்து அஜித் சொன்னதாக பிரபல இயக்குனர் ராஜ்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் பேசிய அவர் ‘ நீ வருவாய் என படத்தில் நடிக்க முதலில் விஜயிடம் பேசினோம். அவருக்கு அப்போது கால்ஷீட் கிடைக்கவில்லை என்பதால் கெஸ்ட் ரோலில் பண்ணுகிறேன் என்று சொல்லி இருந்தார். பின் அஜித் இடம் மெயின் ரோல் பண்ண கேட்டு இருந்தோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு “அஜித் சொன்னது, பொதுவாகவே ஹீரோயின் ஹீரோவை கடைசி வரை பிடிக்கல என்று சொன்னால் அது நன்றாக இருக்காது. மௌன ராகம் படத்தில் மோகன் மெயின் ரோலில் நடித்து இருந்தார். படத்தில் ரேவதி கடைசி வரை அவரை வேணாம் வேணாம் என்று சொன்னதால் தான் அந்த படத்திற்கு பிறகு மோகனுக்கு மார்க்கெட் குறைந்தது. அதேபோல் கார்த்திக் அந்த படத்தில் சில காட்சிகளில் வந்து இருந்தாலும் அந்த படத்துக்கு பிறகு அவருக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் கிடைத்தது” என்று சொன்னார். அப்புறம் தான் அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன்பிறகு பார்த்திபனை மெயின் ரோலில் நடிக்க வைத்தோம்’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது மோகன் 13 வருடங்கள் கழித்து ‘ஹரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.