Mani ratnam:பொன்னியின் செல்வன் நாவல் திரைக்கதை ஆனது இப்படித்தான்..! - பேட்டியில் ஓப்பனாக பேசிய மணிரத்னம்!
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
சர்வதேச அளவில் தமிழ் சினிமாவிற்கு ஒரு அந்தஸ்தை பெற்று தந்த திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம். ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி புதிய சாதனை படைத்த திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
அமோக வரவேற்பு பெற்ற பொன்னியின் செல்வன் 1 :
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ் , ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு மற்றும் பலர் என பெரிய திரை பட்டாளமே நடித்த இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்களான லைகா நிறுவனம்.
Lessons from the Master!
— Madras Talkies (@MadrasTalkies_) October 23, 2022
Here are some BTS stills from #PS1 shoot!
Catch the movie in theaters near you! 📽️#PonniyinSelvan1 🗡️ #ManiRatnam @arrahman @LycaProductions @tipsofficial @tipsmusicsouth @chiyaan @Karthi_Offl @actor_jayamravi @trishtrashers pic.twitter.com/oaEnUgl4aQ
நாவல் எப்படி திரைக்கதையானது :
இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதால் படத்தின் சில காட்சிகளை ரீஷூட் செய்ய திட்டமிட்டுள்ளார் படத்தின் இயக்குனர் மணிரத்னம். அது சம்பந்தமாக சமீபத்தில் தேசிய டிஜிட்டல் மீடியாவிற்கு அளித்த பேட்டியில் இப்படத்திற்காக கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை பற்றி தெரிவித்து இருந்தார். அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி நாவலில் எழுதியிருந்த கதையை திரைக்கதையாக வடிவமைத்ததில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு உறுதுணையாக இருந்து முக்கிய பங்கு வகித்தவர்கள் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல்.
Here's a sneak peek into an exciting BTS featuring the Master - #ManiRatnam as he talks about the making of #PS1 🗡️
— Lyca Productions (@LycaProductions) October 15, 2022
Full video today at 5PM!#PonniyinSelvan 🗡️ @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/UY8EaEAziI
வைரலான மேக்கிங் வீடியோ :
நாவலில் இருந்த சில கதையை நம்பும்படியாகவும், லாஜிக் இருக்கும் படியாகவும் சில காட்சிகளை மாற்றியமைக்க பட்டதாகவும் கூறப்பட்டது. ஒரு சில காட்சிகளில் பாடல்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கபட்டதாகும் தெரிவிக்கப்பட்டது. கதையில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுமே நாவலில் இருந்த விளக்கத்தை பொறுத்து உருவாக்கப்பட்டது. நாவலில் இருந்த கதையை திரைப்படமாக காட்சிப்படுத்த அதற்கு உயிர்கொடுக்க எழுத்தாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் எடுத்துக்கொண்ட சிரமம் மிகவும் கடினமானது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டது. அதில் இணையத்தில் மிகவும் வைரலானது.
விமர்சன ரிதியாக நல்ல வரவேற்பு பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெறும் என மிகவும் உறுதியாக நாமுப்புகின்றனர் படக்குழுவினர்.