House Of The Dragon: புது டிராகன்.. மாஸ் போர்க்காட்சி....நெட்டிசன்களின் அப்ளாஸ் அள்ளும் ஹவுஸ் ஆஃப் த டிராகன் 3-வது எபிசோட்!
ரெனைரா, டேமன் ஆகிய இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களின் எழுச்சி இந்த எபிசோடில் திறமையாகக் கையாளப்பட்டுள்ள நிலையில், தொடரின் இறுதி நிமிடங்களில் நடைபெறும் போர் காட்சி ரசிகர்களை வாவ் சொல்லவைத்துள்ளது.
'ஹவுஸ் ஆஃப் த ட்ராகன்' (House of the Dragon) தொடரின் மூன்றாவது எபிசோட், அதில் இடம்பெறும் புதிய ட்ராகன் மற்றும் போர்க்காட்சிகள் ரசிகர்களின் அப்ளாஸை ஒட்டுமொத்தமாக அள்ளி இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
2011ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை 8 சீசன்கள் வெளியாகி உலகம் சக்கை போடுபோட்ட HBO தொலைக்காட்சித் தொடர் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’.
இதன் 9 அரச குடும்பங்களில் ஒன்றான 'டார்கேரியன்' இனத்தவரைப் பற்றிய ப்ரீக்வலாக ஹவுஸ் ஆஃப் த ட்ராகன் உருவாகியுள்ளது.
Dragons do not fear blood. pic.twitter.com/bW6jRq9Z4D
— House of the Dragon (@HouseofDragon) September 5, 2022
முதல் இரண்டு எபிசோடுகளில் கதாபாத்திர அறிமுகங்கள் தொடங்கி சில திருப்பங்களுடன் நிதானமாகப் பயணித்த இத்தொடர் மூன்றாவது எபிசோடில் அடுத்த தளத்துக்கு முன்னேறி சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.
ரெனைரா டார்கேரியன், டேமன் டார்கேரியன் அலிசண்ட், விசேரிஸ் ஆகிய முக்கியக் கதாபாத்திரங்களுடன் தொடங்கிய தொடரின் மூன்றாவது எபிசோட், "3 ஆண்டுகளுக்குப் பிறகு" எனும் குறிப்புடன் தொடங்கி ட்ராகனைப் போல் நிதானமாகவும் பலமாகவும் பயணிக்கிறது.
ரெனைரா, டேமன் ஆகிய இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களின் எழுச்சி இந்த எபிசோடில் திறமையாகக் கையாளப்பட்டுள்ள நிலையில், தொடரின் இறுதி 10 நிமிடங்களில் நடைபெறும் போர் காட்சி ரசிகர்களை வாவ் சொல்லவைத்து ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’ மோடுக்கு கொண்டு சென்றுள்ளது.
Daemon fckn Targaryen did not utter a single word from the moment he stepped out from Caraxes, got belittled, read a letter, sailed through the waters alone, fake surrender, hit by arrows. The eyes and body tell a LOT.
— 🐣 (@gonlyb) September 5, 2022
Phenomenal acting is what this is!#HouseoftheDragon #HOTD pic.twitter.com/UOYtJzMFF5
Grey கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ள டேமன் டார்கேரியன் கதாபாத்திரம் இந்த எபிசோடில் காட்சிப்படுத்தப்பட்ட விதம், அதன் எழுச்சி, சில நிமிட போர்க்காட்சிகள், Sea Smoke எனும் புதிய டிராகன் என ரசிகர்களை உற்சாகக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள், மீதமுள்ள டிராகன்களின் அறிமுகம் என பெரும் எதிர்பார்ப்புகளுடன் அடுத்தடுத்த எபிசோடுகளை நோக்கி காத்துள்ளனர்.
The words of House Targaryen: Fire & BLOOD. #HouseoftheDragon #hotd pic.twitter.com/6I6DorsRK6
— out of context house of the dragon (@oochotd) September 5, 2022
ஹவுஸ் ஆஃப் த டிராகன் தொடரின் அடுத்தடுத்த எபிசோடுகள் வாராவாரம் இந்திய நேரப்படி திங்கள் கிழமை காலை 6.30 மணிக்கு ஹாட்ஸ்டார் இணையத்தில் வெளியிடப்படுகிறது.