மேலும் அறிய
Advertisement
Hostel First Look | வெளியானது ப்ரியா பவானிஷங்கரின் ஹாஸ்டல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..
அசோக் செல்வன், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் சதீஷ் ஆகியோர் நடிக்கும் ’ஹாஸ்டல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது .
ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ஹாஸ்டல். 2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’அடி கப்பயரே கூட்டமணி’ (Adi Kapyare Kootamani) படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் இதில் அசோக் செல்வன் ,பிரியா பவானிஷங்கர், சதீஷ், நாசர், முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு கட்டுப்பாடான ஆண்கள் விடுதியில் ஒரு பெண் மாட்டிக்கொள்கிறாள். இதனால் அந்த ஹாஸ்டலில் நடக்கும் ரகளைகள், பிறகு அந்த பெண் ஹாஸ்டலை விட்டு எப்படி வெளியேறுகிறார்? என்பதை நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
வருகின்ற மே மாதத்தில் இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியாகும் கல்லூரி ஹாஸ்டல் கலாட்டா திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion