மே மாதம் வெளியாகும் ஹாஸ்டல் திரைப்படம்
அசோக் செல்வன் ,பிரியாபவானி சங்கர் மற்றும் சதிஷ் இணைந்து நடிக்கும் "ஹாஸ்டல்" திரைப்படம் வரும் மே மதம் வெளியாக உள்ளது .
அசோக் செல்வன் ,பிரியாபவானி சங்கர் மற்றும் சதிஷ் இணைந்து நடிக்கும் "ஹாஸ்டல்" திரைப்படம் வரும் மே மதம் வெளியாக உள்ளது . இதில் நாசர் ,சதிஷ் , முனிஷ்காந்த் ,அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள் . இந்த திரைப்படம் 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான" Adi Kapyare Kootamani" என்ற படத்தின் ரீமேக் ஆகும் .
ஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஒரு பெண் மாட்டிக்கொள்கிறாள் . இதனால் அந்த ஹாஸ்டலில் நடக்கும் ரகளைகள் என்ன ? எப்படி அந்தப் பெண் ஹாஸ்டலை விட்டு வெளியே செல்கிறார்? என்பதை முழு நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்தப் படமாக வெளிவர இருக்கிறது. ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க சுமந் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார் . நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழில் ஒரு கல்லூரி ஹாஸ்டல் கதை வரப்போகிறது . மலையாளத்தில் பெற்ற வெற்றியை தமிழில் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.