Jackie Chan: "ஒரு இன்சூரன்ஸ் கூட கிடையாது" ஜாக்கிசானைப் பற்றி அறியாத தகவல்கள் இதோ!
Jackie Chan: உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஜாக்கிசானைப் பற்றி கீழே விரிவாக காணலாம்.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஜாக்கி சானைப் பற்றி சில அறிய தகவல்களை இங்கு பார்க்கலாம்
ஜாக்கி சான்
ஜாக்கி சான் என்றால் அவர் நன்றாக சண்டை போடுவார், சுட்டி டிவியில் வரும் கார்ட்டூன் இதெல்லாம் தான் நமக்கு நியாபகம் வரும். ஆனால் ஜாக்கி சான் பற்றி நாம் தெரிந்துகொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. பெரும்பாலான ரசிகர்கள் அறியாத ஜாக்கி சானைப் பற்றிய சில அரிய தகவல்களை இப்போது நாம் பார்க்கலாம்.
அவருடைய அப்பா ஒரு ஸ்பை
ஒரு சிறிய எழைக் குடும்பத்தில் வளர்ந்த ஜாக்கி சானுக்கு அவருடைய தந்தை ஒரு நாள் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார். அதாவது தான் நாட்டுக்காக வேலை செய்யும் ஒரு உளவாளி என்றும் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகளை தான் விட்டுவிட்டு தான் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவருக்கு இன்சூரன்ஸ் கிடையாது
தனது படங்களில் வரும் சண்டைக் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை தானே செய்யக் கூடியவர் ஜாக்கி சான். இதில் பலமுறை பலத்த காயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த காயத்திற்கு ஏற்படும் மருத்துவ செலவு என்பது ரொம்ப அதிகம் செலவு வைக்கக் கூடியது. இதனால் ஜாக்கி சானுக்கு இன்சூரன்ஸ் வழங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. தனது ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்து தனது மருத்துவ செலவுகளை தானே செய்து வருகிறார் ஜாக்கி சான்.
அவர் ஒரு புகழ்பெற்ற பாடகர்
ஜாக்கி சான் நமக்கு தான் ஒரு நடிகர். ஆனால் சீனாவில் ஜாக்கி சான் ஒரு புகழ்பெற்ற பாடகரும் கூட. கிட்டதட்ட 10 ஆல்பங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அவருடை உண்மையான பெயர்
’சான் காங் சான்’ இதுதான் அவருடைய நிஜப்பெயர். ஒரு கட்டிடத் தொழிலாளராக இருந்தபோது ஜாக் என்கிற ஒருவருக்கு உதவியாளனாக வேலைப் பார்த்தார் ஜாக்கி சான். இதனால் அவரை ஜூனியர் ஜான் என்று எல்லாரும் அழைத்தார்கள். நாளடைவில் இது ஜாக்கி சான் என்று மாறிவிட்டது.
எத்தனை மொழி பேசுவார் தெரியுமா
ஜாக்கி சான் ஆங்கிலம் , சீன மொழி , மேண்டரின் , கொரியன் , ஜெர்மன், தாய்லாந்து நட்டின் மொழியான தாய் என மொத்தம் ஏழு மொழிகளை பேசக்கூடியவர்.
புரூஸ் லீயின் உதவியாளர்
அன்றைய தற்காப்பு கலையில் பிதாமகனான புரூஸ் லி நடித்த இரண்டு படங்களில் ஸ்டண்ட் உதவியாளராக ஜாக்கி சான் இருந்திருக்கிறார். புரூஸ் லீ பேச்சு தன்னை அதிகம் ஈர்த்ததாக ஜாக்கி தெரிவித்துள்ளார்.
70 முறை படுகாயம் அடைந்திருக்கிறார்
தனது ஸ்டன்ஸ் காட்சிகள் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக தனது சண்டைக் காட்சிகளை தானே செய்யக் கூடியவர் ஜாக்கி சான். இதில் பலமுறை அவர் காயம் பட்டிருக்கிறார். இதுவரை சுமார் 70 முறை அவருக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஒரு விபத்தில் அவரது தலையில் அடிபட்டது. அவரது மண்டை ஓட்டில் ஒரு துளையும் இதனால் ஏற்பட்டுள்ளது.