மேலும் அறிய

Hugh Jackman: நாம் பார்த்தது எக்ஸ்மேன்.. ஆனா இவர் எல்லா ஜானர்லயும் கலக்குவார்.. இன்று ஹியூக் ஜேக்மேன் பிறந்தநாள்!

எக்ஸ்மேன் திரைப்படத்தின் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற நடிகர் ஹியூக் ஜாக்மனின் பிறந்தநாள் இன்று!

தமிழில் ஹாலிவுட் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் நிச்சயம் எக்ஸ் மேனாக நடித்த ஹியூக் ஜேக்மேன் என்கிற நடிகரைத் தெரிந்து வைத்திருப்போம். பெரும்பாலான ரசிகர்கள் அவரை ஒரு மார்வெல் காமிக் சூப்பர்ஹீரோ கதாபாத்திரமாகவே பார்த்திருக்கிறோம். ஆனால் தனது ஒவ்வொரு படத்துக்கும் ஏதோ ஒரு வகையில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ச்சியாக நடித்து வருபவர் ஹியூக் ஜேக்மேன். இன்று அவரது பிறந்தநாள்.

தொடக்கம்

ஒரு  நடுத்தர குடும்பத்தில் பிறந்து நல்ல கல்வி பெற்று வளர்ந்தவர் ஹியூக் ஜேக்மேன். எல்லாரையும் போல் அவரது வாழ்க்கையும் எந்தவித தனித்துவமும் இல்லாமல் சதாரணமாக ஓடிக் கொண்டிருந்தது. தன்னுடைய வாழ்க்கையில் எந்தவிதமான புகாரும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. தனது கல்லூரிக்காலத்தில் ஒரு நாடகத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் ஹியூக் ஜேக்மேன்.

அந்த நாடகத்திற்கான பயிற்சிகள் தொடங்கி அரங்கேற்றம் முடியும் காலம் வரை எல்லாம் சரியாக தான் போய்க்கொண்டிருந்தது. அந்த நாடகம் முடிந்த மீண்டும் தனது சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும்போது தான் இந்தக் குறிப்பிட்ட காலம் தானும் தன்னைச் சுற்றி இருந்தவர்களும் எவ்வளவு  மன நிறைவோடு இருந்தோம் என்பதை அவர் உணர்கிறார். வாழ்க்கையில் முதன்முறையாக தான் ஒரு நடிகனாக விருப்பப்படுகிறோமா என்கிற கேள்வியை தன்னிடம் கேட்டுக் கொண்டார்.

நடிப்பு பயணம்

கல்லூரி படித்துக் கொண்டே தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளில் தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி வந்தார் ஹியூக் ஜேக்மேன். குறிப்பிட்ட சில ஆண்டுகளில் சோப் ஒபேரா என்று சொல்லப்படும் ஒரு வித பாடல் நாடகத்தில் சுற்று வட்டாரங்களில் அங்கீகரிக்கப்படும் ஒரு நடிகராக உருவாகத் தொடங்கினார். தனது கல்லூரி பட்டப்படிப்புச் சான்றிதழை கையில் வாங்கி சரியாக 13 நொடிகளில் ஜியூ ஜாக்மனுக்கு தனது முதல் வேலைக்கான அழைப்பு வருகிறது. அவரது வாழ்க்கையை மேலும் அழகாக்கும் வகையில், தான் வேலை செய்த அதே இடத்தில் தனது வருங்கால மனைவியையும் சந்திக்கிறார். தொடர்ந்து நாடகத்துறையில் பணியாற்றிய அவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

எக்ஸ் மேன்

கவனிக்கத்தக்க ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள ஒரு பெரிய கதாபாத்திரம் தேவைப்பட்டது. அதற்கான காலம் வரும் வரை சின்ன சின்ன கதாபாத்திரங்களில்  நடித்து வந்தார். மார்வெல் காமிக்ஸின் ஒரு கதாபாத்திரமான எக்ஸ் மேன் கதாபத்திரத்தை படமாக்க முடிவு செய்யப்பட்டபோது அதற்கு ஒரு பிரபல ஹாலிவுட் நடிகர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் அந்த நடிகர் இந்தக் கதாபாத்திரத்தில் ஹியூக் ஜாக்மானை நடிக்க வைக்கச் சொல்லி பரிந்துரைத்திருக்கிறார். இபோது இந்த கதாபாத்திரத்தை ஹியூக் ஜாக்மான் நடிக்க தடையாக இருந்தவர் ஒரே ஒருவர்தான், அது அவரது மனைவி. இந்த மாதிரியான சுப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் தனது கனவனின் நடிப்பு எல்லையை சுருக்கி விடும் என்று அவர் கருதினார்.

ஆனால் தனது மனைவியின் ஒப்புதலோடு ஹியூக் ஜாக்மான் எக்ஸ் மேனாக நடித்தார். மற்ற சூப்பர் ஹீரோக்களைப் போல் இல்லாமல் மிக அமைதியான சுபாவமுள்ள ஒரு கதாபாத்திரம் எக்ஸ் மேன். பெரிய அளவில் வசனங்கள் பேசாமல் உணர்ச்சிகளை முக பாவனைகளில் மட்டுமே காட்டவேண்டிய சவால் அவருக்கு இருந்தது. இதனை கற்றுக்கொள்ள வசனங்கள் குறைவாக இருந்து. ஆனால் அதிக தாக்கம் ஏற்படுத்தக் கூடிய படங்களைத் தேர்வு செய்து பார்த்தார்.

தன்னுடைய எக்ஸ்மேன் கதாபாத்திரம் அடிப்படையில் ஓநாய்களின் இயல்பைப் போல் இருந்ததால் ஓநாய்களைப் பார்த்து அவற்றின் குணாதிசயங்கள பழகிப்பார்த்தார் ஜேக்மேன். எக்ஸ்மேன் பட வரிசையில் மொத்தம் 13 படங்களில் நடித்தார். ஒரு படவரிசையில் அதிகம் படங்கள் நடித்ததற்காக ஹியூக் ஜேக்மேன் கின்னஸ் சாதனை படைத்தார்.

பிற படங்கள்

பொதுவாகவே சூப்பர் ஹீரோ படங்களில் நடிப்பவர்களின் எல்லை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாகவே சுருங்கி விடுவது வழக்கம். உதாரணத்திற்கு அயர்ன் மேன் படத்தில் நடித்த ராபர்ட் டெளனி ஜூனியர் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடிய ஒரு நடிகர். ஆனால் அயர்ன் மேனாக நடித்த காரணம் ஒன்றே அவரை பிற கதாபாத்திரங்களில் பொருத்தி இயக்குநர்களால் கற்பனை செய்ய முடியவில்லை.

ஒரு சிலரைத் தவிர. ஆனால் ஹீயூக் ஜாக்மானின் பாதை சற்று வேறுபட்டது. சூப்பர் ஹீரோ படம் ஒருபக்கம், மறுபக்கம் கிறிஸ்டோபர் நோலனின் இயக்கம் என நடித்தார். ரொமாண்டிக் நடிகர், சூப்பர்ஹீரோ, டிராமா, ஹாரர், பீரியட் ஃபிலிம் என அத்தனை வகையான படங்களிலும் தன்னை பொருத்திக் கொண்டு நடித்திருக்கிறார். நிச்சயம அவரது படங்ளை தேடிப் பார்ப்பது எக்ஸ் மேனைத் தாண்டி அவரைக் கொண்டாடுவது அந்த நடிகரின் திறமைக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரம் கொடுப்பது ஆகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMKVijayalakshmi Seeman Case:  ”ஏழு முறை கருக்கலைப்பு பணம் பெற்ற சீமான்” குட்டு வைத்த நீதிமன்றம்Rahul gandhi On Modi And Adani | அதானி குறித்த கேள்வி”இது பர்சனல் மேட்டரா மோடி” கோபமான ராகுல் | BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
Manjummel Boys Making Video: மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
Embed widget