தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதிக்கு இந்தி நடிகர் பாராட்டு
தேசிய விருது பெற்றுள்ள விஜய் சேதுபதிக்கு இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 67வது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இந்த விருது போன்ஸ்லே என்ற படத்தில் நடித்ததற்காக பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயிக்கும் வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thank you so much sir ☺️<br>congrats sir.. congrats sir... you are really such a sweet person i have ever met. <a href="https://t.co/UaxRVSnkat" rel='nofollow'>https://t.co/UaxRVSnkat</a></p>— VijaySethupathi (@VijaySethuOffl) <a href="https://twitter.com/VijaySethuOffl/status/1374342750850617344?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 23, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதிக்கு மனோஜ் பாஜ்பாயி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி. நீங்கள் அற்புதமானவர். உங்களுக்கு அணைப்புகள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பாராட்டிற்கு நன்றி தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, மிக்க நன்றி. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். நான் சந்தித்ததிலே நீங்கள் மிகவும் இனிமையான மனிதர் என்று பதிவிட்டுள்ளார்.