மேலும் அறிய

HBD Vijayakanth: கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள்! இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்!

HBD Vijayakanth: தமிழ் சினிமாவின் கேப்டன் என்றும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்ககட்சித் தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று ஆகும்.

HBD Vijayakanth: தமிழ் திரையுலகம் ஆயிரக்கணக்கான நடிகர்களை தந்திருந்தாலும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் காலத்திற்கும் குடி கொண்ட கலைஞர்கள் வெகு சிலரே ஆவார்கள். அவர்களின் எப்போதும் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ளவர் விஜயகாந்த்.

கருப்பு எம்.ஜி.ஆருக்கு பிறந்தநாள்:

கொடை வள்ளல், கருப்பு எம்.ஜி.ஆர் என்றும் கேப்டன் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். கடந்தாண்டு நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற கேப்டனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் அவரது தொண்டர்களும், ரசிகர்களும் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும்.

1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி விஜயராஜ் அழகர்சாமியாக அருப்புக்கோட்டையில் பிறந்தவர். சிறுவயதிலே மதுரைக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. இதையடுத்து, மதுரையில் அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான ரைஸ்மில்லில் பாதி நேரத்தையும், நண்பர்களுடன் பாதி நேரத்தையும் செலவிட்டவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராத காதல் இருந்து வந்தது.

பட வாய்ப்புக்காக போராட்டம்:

மதுரையில் உள்ள ராசி ஸ்டூடியோஸ் நகரில் எடுத்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டு சென்னையில் திரைப்பட வாய்ப்புத் தேடி வந்தார். வாய்ப்பு தேடி சென்னை வந்தவருக்கு 1978ம் ஆண்டு மாதவன் இயக்கத்தில் என் கேள்விக்கு என்ன பதில் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், படத்தின் இயக்குனர் மாதவன் விஜயகாந்திற்கு பதில் சிலோன் மனோகரை நடிக்க வைத்துவிட்டார்.

அதன்பின்பு அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தாலும் அவரது கருமையான நிறத்தினால் வாய்ப்பு கிடைக்காமல் நழுவிச்சென்றது. விஜயராஜாக வாய்ப்புத் தேடி வந்தவருக்கு 1979ம் ஆண்டு இனிக்கும் இளமை படத்தில் விஜயகாந்தாக வில்லனாகும் வாய்ப்பு கிடைத்தது. அவரது வேகமும், நடிப்பும் அவருக்கு அதே ஆண்டு அகல் விளக்கு படத்தில் நாயகனாகும் வாய்ப்பை பெற்றுத்தந்தது.

ஆக்‌ஷனும், காதலும்:

விஜயகாந்திற்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது தூரத்து இடி முழக்கம் படம். இந்த படத்திற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் விஜயகாந்தை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. சிவப்பு மல்லி படமும் அவருக்கு மேலும் பெயர் பெற்றுத்த தந்தது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் புகழ் வௌிச்சத்தில் சத்யராஜ், பிரபு, மோகன், ராமராஜன் இவர்களுடனான வளர்ச்சியுடன் விஜயகாந்த்  தனக்கென தனி டிராக்கை உருவாக்கி கொண்டு வளரத் தொடங்கினார். வெற்றி, சராசரி வெற்றி என படங்களை கொடுத்தவர் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது வைதேகி காத்திருந்தாள் திரைப்படம். மிக மென்மையான காதல் திரைப்படத்தில் காதலியை பறிகொடுத்த இளைஞராக மிக அசத்தலான நடிப்பை விஜயகாந்த் வெளிப்படுத்தியிருப்பார்.

பூந்தோட்டக் காவல்காரனின் ஊமை விழிகள்:

விஜயகாந்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற வைதேகி காத்திருந்தாளுக்கு பிறகு நானே ராஜா நானே மந்திரி படத்தில் நகைச்சுவையாக நடித்து அசத்தியிருப்பார். கலவையான வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்த விஜயகாந்திற்கு அம்மன் கோயில் கிழக்காலே இன்னொரு ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும், விஜயகாந்தின் நடிப்பும் அவரை அனைவரையும் கொண்டாட வைத்தது.

அவரது வசன உச்சரிப்பும், நடிப்பும், உடல்மொழியும்  அனைவரையும் ரசிக்க வைக்க ஊமை விழிகள் படம் அவரை அறிமுக இயக்குனர்களின் ஆஸ்தான நாயகன் என்ற அவதாரத்தை எடுக்க வைத்தது. ஊமை விழிகளுக்கு பிறகு ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த விஜயகாந்த் தர்ம தேவதை, சிறை பறவை, வீரபாண்டியன், கூலிக்காரன், உழவன் மகன் என அடுத்தடுத்து ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருக்க, மீண்டும் அவரது வித்தியாசமான நடிப்பில் வெளியான பூந்தோட்ட காவல்காரன் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றதுடன் விஜயகாந்திற்கு பெரும் புகழைச் சேர்த்தது.

ரஜினி, கமலுக்கு நிகரான உச்சநட்சத்திரம்:

பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் “இடம்பெற்ற இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் பக்கத்தில்” பாடல் அவர் காலமானபோது அனைவராலும் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பகிரப்பட்டது. என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், பாட்டுக்கு ஒரு தலைவன் என குடும்ப பின்னணி படங்களில் நடித்த விஜயகாந்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் அளவிற்கு புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பொன்மனச் செல்வன். இந்த படத்தில் இடம்பெற்ற நீ பொட்டு வச்ச தங்கக்குடம் இன்றைக்கும் கிராமப்புறங்களில் விஜயகாந்த் புகழ் சொல்லும் பாடலாக உள்ளது.

1990களுக்கு பிறகு விஜயகாந்த் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நிகரான புகழ்பெற்ற நடிகராக உலா வரத் தொடங்கினார். போலீஸஅ கதாபாத்திரம் என்றாலே விஜயகாந்த் மட்டுமே என்று சொல்லும் அளவிற்கு காவல்துறை அதிகாரியாக மிகவும் கச்சிதமாக பொருந்திப் போனார் விஜயகாந்த். புலன் விசாரணை, சத்ரியன் என்று ப்ளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்து உச்சத்திற்கு சென்றார். அவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களும் உருவாகினார்கள்.

100வது படம் 100 நாள் படம் ஓடிய ஒரே நடிகர்:

எந்த நடிகருக்கும் 100வது படம் தமிழில் ஓடவில்லை என்ற வரலாற்றை உடைத்தவர் நடிகர் விஜயகாந்த். அவரது கேப்டன் பிரபாகரன் 1991ம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலே அதிக வசூலை குவித்த திரைப்படம் ஆகும். அந்த படத்திற்கு பிறகே விஜயகாந்த் கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான மாநகர காவல் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. போலீஸ் அதிகாரியாக உலா வந்தவரை மீண்டும் கிராமத்து மக்களின் நாயகனாக கொண்டு சென்றது சின்ன கவுண்டர்.

சேதுபதி ஐ.பி.எஸ்., ஆனஸ்ட் ராஜ், என் ஆசை மச்சான், உளவுத்துறை, கள்ளழகர், கண்ணுபட போகுதய்யா, வானத்தைப் போல, வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா என 90 முதல் 2000 வரை மிரட்டலான வெற்றிபபடங்களை கொடுத்து தமிழ் மக்களின் நாயகனாகவே மாறினார்.

நிஜத்திலும் பொன்மனச் செல்வன்:

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் ஏராளமான நன்மைகளை செய்து வந்த விஜயகாந்தால் திரையுலகில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். ஏராளமான இயக்குனர்களை அறிமுகப்படுத்தியதுடன் பல திரைக்கலைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி செய்துள்ளார். அவரது மக்கள் சேவையே அவரை அரசியல் பயணத்திற்கும் அழைத்து வந்தது. அவரது அரசியல் வருகைக்கு ரமணா, சொக்கத் தங்கம், எங்கள் அண்ணா போன்ற படங்களின் வெற்றியும் கை கொடுத்தது.

திரைப்படங்களில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் கர்ஜிப்பவராகவே திகழ்ந்த விஜயகாந்த் கருணாநிதியுடன் நெருக்கமானவராக திகழ்ந்தவர். பின்னர், 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியைத் தொடங்கினார், 2006 சட்டமன்ற தேர்தலிலே தனித்து நின்று 10 சதவீத வாக்குகளை பெற்று தி.மு.க., அ.தி.மு.க. கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்தார். தே.மு.தி.க. சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார்.

எதிர்க்கட்சித் தலைவர்:

அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக முன்னேறினார். அதன்பின்பு, அவருக்கு அரசியலில் சரிவு ஏற்பட்டது என்றே கூறலாம். உடல்நலக்குறைவு, சரியாக பேச இயலாத சூழல் போன்ற பல காரணங்கள் அவரது அரசியல் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

2016ம் ஆண்டு மக்கள் நலக்கூட்டணி விஜயகாந்த் தலைமையில் அமைந்து படுதோல்வியைச் சந்தித்தது. விஜயகாந்த் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் கட்சி மாறியதும் அவருக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியது.பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

காலம் அழைத்துக் கொண்ட கலைஞன்:

பின்னர், வீட்டில் ஓய்விலே இருந்தவர் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், சென்னை திரும்பியவர் வீட்டிலே ஓய்வு பெற்று வந்த நிலையில் ஒவ்வொரு பிறந்த நாளில் மட்டும் தொண்டர்களைச் சந்திப்பார். அவர் இறுதியாக தொண்டர்களைச் சந்தித்தபோது உடல் மெலிந்து காட்சி அளித்தது தொண்டர்களையும், அவரது ரசிகர்களையும் கண்ணீர் விட வைத்தது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளித்தவர் என்ற பெருமைக்குரிய விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என ஒட்டுமொத்த திரையுலகமும் நேரில் சென்று கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தியது. காலம் அவரை அழைத்துக் கொண்டாலும் அவரது புகழ் என்றும் காற்றில் நிலைத்திருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Arvind Kejriwal: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! டெல்லி அரசியலில் புது திருப்பம்!
Arvind Kejriwal: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! டெல்லி அரசியலில் புது திருப்பம்!
“மீண்டும் ஃபார்முக்கு வந்த அதிமுக” வளர்மதி தலைமையில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
“மீண்டும் ஃபார்முக்கு வந்த அதிமுக” வளர்மதி தலைமையில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
MK Stalin Letter : ”இது தான் திமுகவின் 75 ஆண்டுகால சாதனை” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இது..!
MK Stalin Letter : ”இது தான் திமுகவின் 75 ஆண்டுகால சாதனை” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இது..!
Gold Price Today: தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை நெருங்கியது!
Gold Price Today: தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை நெருங்கியது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! டெல்லி அரசியலில் புது திருப்பம்!
Arvind Kejriwal: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! டெல்லி அரசியலில் புது திருப்பம்!
“மீண்டும் ஃபார்முக்கு வந்த அதிமுக” வளர்மதி தலைமையில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
“மீண்டும் ஃபார்முக்கு வந்த அதிமுக” வளர்மதி தலைமையில் திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
MK Stalin Letter : ”இது தான் திமுகவின் 75 ஆண்டுகால சாதனை” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இது..!
MK Stalin Letter : ”இது தான் திமுகவின் 75 ஆண்டுகால சாதனை” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது இது..!
Gold Price Today: தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை நெருங்கியது!
Gold Price Today: தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை நெருங்கியது!
TNPSC: படிச்சிட்டீங்களா? நாளை குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு! இத்தனை லட்சம் பேரா எழுதுறாங்க?
TNPSC: படிச்சிட்டீங்களா? நாளை குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு! இத்தனை லட்சம் பேரா எழுதுறாங்க?
Breaking News LIVE: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
Breaking News LIVE: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
2026 தேர்தலில் கூட்டணிகள் சிக்கல்.. விஜய் வந்தால் கூட... வெளிப்படையாக பேசிய திருமா 
2026 தேர்தலில் கூட்டணிகள் சிக்கல்.. விஜய் வந்தால் கூட... வெளிப்படையாக பேசிய திருமா 
கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டு பாலியல் சீண்டல்... ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மர்மநபர்... திண்டிவனத்தில் பரபரப்பு
கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டு பாலியல் சீண்டல்... ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மர்மநபர்... திண்டிவனத்தில் பரபரப்பு
Embed widget