மேலும் அறிய
Advertisement
HBD Prabhas: ஹாப்பி பர்த்டே பாகுபலி! பிரபாஸ் பற்றி இதுவரை நீங்கள் அறியாதது - ஓர் அலசல்
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸ் பற்றி அறியாத தகவல்களை கீழே காணலாம்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபாஸ். பாகுபலி நடித்ததின் மூலம் இந்திய அளவில் மிகவும் முக்கியமான நடிகராக பிரபாஸ் திகழ்கிறார். 1979ம் ஆண்டு பிறந்த பிரபாஸிற்கு இன்று 45வது பிறந்தநாள் ஆகும்.
பிரபாஸ் பற்றி அறியாதது:
நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகர் பிரபாஸ் பற்றி தெரியாத தகவல்களை கீழே விரிவாக காணலாம்.
- பிரபாஸின் முழுப்பெயர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவரது முழுப்பெயர் வெங்கட சத்யநாராயண பிரபாஸ் ராஜூ உப்பலபடி என்பதே ஆகும்.
- பிரபாஸ் ஒரு பொறியியல் பட்டதாரி. ஹைதரபாத்தில் உள்ள ஸ்ரீசைதன்யா கல்லூரியில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.
- பிரபாஸிற்கு முதலில் நடிப்பதற்கு பெரியளவில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. படிப்பை முடித்த அவருக்கு ஹோட்டல் தொழில் மீதே ஆர்வம் இருந்துள்ளது. மிகப்பெரிய ஹோட்டல் தொழிலதிபர் ஆக வேண்டும் என்பதே அவரது விருப்பம் ஆகும்.
- பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் நடிக்க ஒப்பந்தம் ஆன காலகட்டத்தில் பிரபாஸ் எந்தவொரு விளம்பர படத்திலும், வேறு படங்களிலும் நடிக்கவில்லை. இதற்காகவும் அவர் படக்குழுவினருடன் ஒப்பந்தம் போட்டிருந்தார்.
- பிரபாஸிற்கு பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் திரைப்படங்கள் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அவரது முன்னாபாய் எம்.பி.பி.எஸ். 3 இடியட்ஸ் படங்களை பல முறை பார்த்துள்ளார்.
- லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹால் அரங்கில் ஆங்கிலம் அல்லாமல் ஒளிபரப்பப்பட்ட ஒரே திரைப்படம் பாகுபலி படம் ஆகும்.
- பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற டுசாவ்ட் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு தென்னிந்திய நடிகர் பிரபாஸ் மட்டுமே ஆவார்.
- பிரபுதேவா நடித்துள்ள ஆக்ஷன் ஜாக்சன் என்ற இந்தி படத்தில் பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்.
- பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நிரோவின் மிகப்பெரிய ரசிகர் பிரபாஸ்.
- பிரபாஸ் மிகப்பெரிய உணவுப்பிரியர். அவருக்கு பட்டர் சிக்கன் மற்றும் பிரியாணி மிகவும் பிடித்த உணவு ஆகும். அவர் தன்னுடைய பட வெளியீட்டிற்கு பிறகு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2 உள்பட 5 படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion