மேலும் அறிய

HBD Manorama: மனோரமா பிறந்த நாள்.. 5 முதலமைச்சர்களுடன் பணியாற்றி அசத்திய ஆச்சி..

தமிழ் சினிமாவின் ஆச்சி என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் மனோரமா, மண்ணில் இருந்து மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் மூலமாக இன்றும் நம் கண் முன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகர்கள், கதாநாயகிகள் என பலரும் தமிழ் சினிமாவில் சோபித்தாலும் சில நடிகர்கள், நடிகைகளின் நடிப்பும் அவர்களின் புகழும் நாயக அரிதாரம் பூசும் பிரபலங்களை விட பன்மடங்கு வான் அளவிற்கு உயர்ந்து நிற்கும். அப்படி ஒரு மகா கலைஞர்தான் நடிகை மனோரமா.

தமிழ் சினிமாவின் ஆச்சி மனோரமா:

தமிழ் சினிமாவின் ஆச்சி என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் மனோரமா, மண்ணில் இருந்து மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் மூலமாக இன்றும் நம் கண் முன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்று அவருக்கு பிறந்த நாள்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமா கொண்டாடிய அத்தனை பிரபலங்களுடனும் நடித்துள்ளார். நடிப்பில் பெண் சிவாஜி என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே இவரது நடிப்பை போற்றியுள்ளார்.

5 முதலமைச்சர்களுடன் பணியாற்றியவர்:

பல்வேறு பெருமையை தன்னகத்தே கொண்ட நடிகை மனோரமா, 5 முதலமைச்சர்களுடன் பணியாற்றியவர் என்ற பெருமையை கொண்டவர். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுடனான அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மட்டுமின்றி ஆந்திர முதலமைச்சர் என்.டி.ராமராவுடன் இணைந்தும் மனோரமா பணியாற்றியுள்ளார்.

நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கி மிகப்பெரும் நடிகையாக உலா வந்த மனோரமா, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி நாடகத்தில் நடித்தவர். அதுமட்டுமின்றி, அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், ஓர் இரவு நாடகத்திலும் நடித்துள்ளார்.

இது மட்டுமின்றி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உதயசூரியன் என்ற நாடகம் எழுதியிருந்தார். அந்த நாடகத்தில் கருணாநிதியே கதாநாயகனாக கருணாநிதி நடிக்க, கதாநாயகியாக மனோரமா நடித்துள்ளார்.

என்.டி.ராமராவுடன் நடித்து அசத்தல்:

அ.தி.மு.க.வை தொடங்கி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆருடன் ஏராளமான படங்களில் மனோரமா படங்களில் நடித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை அம்மு என்று பாசத்துடன் அழைக்கும் உரிமையை பெற்ற மனோரமா அவரின் தோழியாக எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக உலா வந்தவருமான என்.டி.ஆருடனும் லவ குசா என்ற படத்தில் நடித்துள்ளார். மனோரமா தெலுங்கில் நடித்த முதல் படமே என்.டி.ராமாரவுடனே ஆகும்.

இப்படி இந்திய திரையுலகிற்கே பெருமை சேர்த்த மனோரமா 5 முதலமைச்சர்களுடன் பணியாற்றியது மட்டுமின்றி இவர்கள் அனைவருடனும் நெருக்கமான நட்பை கொண்டிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், சிங்களம் மற்றும் இந்தியிலும் நடித்துள்ளார். தனக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ள தமிழ் பிரபலங்கள் அனைவரையும் தன் அன்பால் கட்டிப்போட்டவர் என்ற பெருமையும் மனோரமாவிற்கு சேரும். இந்த மண்ணில் இருந்து மறைந்தாலும் தமிழ் சினிமா இருக்கும் வரை நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

மேலும் படிக்க: Maari Serial: மீண்டும் கை மாறும் குழந்தை.. தாராவுக்கு மரண பயத்தை காட்டிய மாரி - மாரி சீரியல் அப்டேட்!

மேலும் படிக்க: Sivakarthikeyan: அமரன் படக்குழுவுக்கு பிரியாணி பரிமாறிய சிவகார்த்திகேயன்.. ஷூட்டிங் ஓவர், ரிலீஸ் தேதி இதுதான்!

தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Embed widget