Pushpa 2 Teaser: காளிதேவி அவதாரம் எடுத்த அல்லு அர்ஜூன் .. பிறந்தநாளில் வெளியான புஷ்பா 2 டீசர்!
நடிகர் அல்லு அர்ஜூன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரிலும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் டீசரானது வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் அல்லு அர்ஜூன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் “புஷ்பா தி ரைஸ்” எடுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகம் “புஷ்பா தி ரூல்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபஹத் ஃபாசில், சுனில் ஷெட்டி அனுஷ்யா பரத்வாஜ், அஜய் கோஷ் என பலரும் நடித்திருந்தனர்.
செம்மரக்கட்டைகள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புஷ்பா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முதல் பாகம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூ.360 கோடி வசூலித்தது. மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அனைவரும் இரண்டாம் பாகத்துக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.
𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐞 𝐡𝐢𝐬 𝐚𝐫𝐫𝐢𝐯𝐚𝐥. 𝐀𝐝𝐨𝐫𝐞 𝐡𝐢𝐬 𝐟𝐢𝐫𝐞 𝐰𝐢𝐭𝐡𝐢𝐧. 𝐄𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐬𝐞𝐛𝐮𝐦𝐩𝐬. #Pushpa2TheRuleTeaser out now 🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 8, 2024
▶️ https://t.co/A2n4hu3oO4
Happy Birthday Icon Star @alluarjun ❤️🔥
𝗧𝗛𝗘 𝗥𝗨𝗟𝗘 𝗕𝗘𝗚𝗜𝗡𝗦 on 15th AUG… pic.twitter.com/5xe42ZixBW
இப்படியான நிலையில் புஷ்பா தி ரூல் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பல போஸ்டர்கள் வெளியானது. அதேசமயம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுப் பெற்று போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையே நடிகர் அல்லு அர்ஜூன் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரிலும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த நாளை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு புஷ்பா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க மாஸ் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படத்தின் டீசர் ரசிகர்களுக்கு தியேட்டரில் விருந்து காத்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது. டீசர் வெளியாவதை முன்னிட்டு #Pushpa2TheRuleTeaser, Happy Birthday Anna, Icon Star என ஏராளமான ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.