Watch Video: கடைசியாக 'யம்மா நந்தினி..' மாரிமுத்துவுடன் கடைசி காட்சி... உருக்கமான வீடியோ பகிர்ந்த நந்தினி..!
Ethir neechal Nandini: எதிர்நீச்சல் தொடர் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான நடிகர் மாரிமுத்து கடந்த வெள்ளிக்கிழை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Watch Video: கடைசியாக 'யம்மா நந்தினி..' மாரிமுத்துவுடன் கடைசி காட்சி... உருக்கமான வீடியோ பகிர்ந்த நந்தினி..! Haripriya emotional note on last scene with actor Marimuthu in ethir neechal serial Watch Video: கடைசியாக 'யம்மா நந்தினி..' மாரிமுத்துவுடன் கடைசி காட்சி... உருக்கமான வீடியோ பகிர்ந்த நந்தினி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/98af1609458295e27f1c367573dd108e1694616740391572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சன் டிவியின் மிகவும் பிரபலமான மற்றும் ஏராளமான ரசிகர்களை கொண்ட சீரியல் எதிர் நீச்சல். தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்து வரும் இந்த சீரியலின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியலில் நடிப்பவர்களின் யதார்த்தமான நடிப்பு என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் எதிர் நீச்சல் மிகப்பெரிய வரவேற்பை பெற காரணமாக இருந்தவர் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து. உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவராக இருந்த போதிலும் அவருக்கு ஒரு பிரேக்கிங் பாய்ண்ட்டாக அமைந்த சீரியல் தான் எதிர் நீச்சல்.
மாரிமுத்து காலமானார் :
எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மூத்த அண்ணனாக அனைவரையும் கைக்குள் அடக்கி வைக்கும் கம்பீரமான கரடு முரடான கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர் நடிகர் மாரிமுத்து. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரின் இந்த இழப்பு திரையுலகத்தினர், சக நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
மிஸ் யூ மாமா :
எதிர் நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுடன் நடித்த நடிகர்கள் அவரின் ஈடு செய்ய முடியாத இழப்பை உருக்கமான பதிவுகள் மூலம் அவரின் நினைவுகளாக இருக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியா மூலம் பகிர்ந்து இருந்தனர். அந்த வகையில் எதிர் நீச்சலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்ரியா அவர் இறந்த அன்றே "நந்தினி வில் மிஸ் யூ லைக் ஹெல்" மாமா என அவருடன் கடைசியாக எடுத்த புகைப்படம் ஒன்றை கனத்த இதயத்துடன் பகிர்ந்து இருந்தார்.
ஹரிப்ரியாவின் போஸ்ட் :
தற்போது எதிர் நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்துவுடன் ஹரிப்ரியா நடித்த கடைசி காட்சியை பகிர்ந்து "அவருடனான கடைசி காட்சி... கடைசியாக அவரிடமிருந்து யம்மா நந்தினியின் குரலைக் கேட்டது... மிகவும் கனத்த இதயத்துடன் குட் பை..." என உருக்கமான ஒரு குறிப்பை பகிர்ந்துள்ளார்.
நந்தினி மட்டுமல்ல ரசிகர்களாகிய நாங்களும் தான் அவரை ரொம்ப மிஸ் செய்கிறோம் என கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக ஆதி குணசேரனாக ஒலித்த மாரிமுத்துவின் குரல்...
View this post on Instagram
நிறைவு பெற்ற பயணம் :
ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்துவின் பயணம் இன்றுடன் எதிர் நீச்சல் நிறைவு பெற்றது என்றாலும் என்றுமே அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரின் அந்த நினைவலைகள் எதிர் நீச்சல் சீரியல் உள்ள வரையில் இருந்து கொண்டே தான் இருக்கும். அவருக்கு நிகர் அவர் மட்டுமே என்பது எதிர் நீச்சல் சீரியலின் தீவிர ரசிகர்களின் உறுதியான நம்பிக்கை.
மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் இனி அவரின் இடத்தில் நடிகர் மற்றும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளார் என தகவல்கள் பரவலாக பரவி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)