GV Prakash - Selvaraghavan: மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி - செல்வா, ஜி.வி. ஆயிரத்தில் ஒருவன் - 2 - என்னமோ இருக்கு..!
மீண்டும் ஒரு புதிய படத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைய உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் குமார் மகிழ்ச்சியுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைய உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதைத்தொடர்ந்து, கிரீடம், பொல்லாதவன், ஆடுகளம், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, தலைவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து திறமைமிக்க இசையமைப்பாளராக தற்போது வரை தன்னை நிருபித்துக்கொண்டிருக்கிறார். இடையில், நடிப்பில் ஆர்வம் வர பென்சில், த்ரிஷா இல்லன நயன்தாரா, டார்லிங் போன்ற படங்களில் நடித்து ஹீரோவாகவும் ஜொலித்தார். பின்னர், சில படங்கள் இவருக்கு சரிவர ஹிட் கொடுக்காத நிலையில், அசுரன் படம் இவருக்கு இசையில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதன்பிறகு, சூரறைப்போற்று படம் இவருக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது. தெலுங்கிலும் பிசியான இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் உள்ளார். சிவப்பு, மஞ்சள், பச்சை, பேச்சிலர், ஜெயில் போன்ற சமீபத்திய படங்கள் இவருக்கு ஹிட் கொடுத்த நிலையிலும், இசையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி
செல்வராகவன், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவான அனைத்து படங்களின் இசையும், பாடலும் இன்றளவும் பட்டித்தொட்டி எங்கும் பேசப்படுகிறது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் இருவருக்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இவர்களின் கூட்டணியில் படம் வந்தாலே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்று ரசிகர்களின் மத்தியில் பல வருடங்களுக்கு முன்பாகவே இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின்போது இருவருக்கும் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்னையால் அப்படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா விலகினார். அதைத்தொடர்ந்து, அப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் ஆனார். இந்த கூட்டணி சரிவருமா என்று அன்றைய காலக்கட்டத்தில் சினிமா ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதையெல்லாம் அந்த சிறுவயதில், இவரா? இந்தப்ப்டத்திற்கு இசையமைத்தது என்று அனைவரையும் ஆச்சரியப்டவைத்தார். ஆனால், படம் எதிர்பாராத வெற்றியை பெறாததால், ஜி.வி.க்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனை ஜிவியே ஒரு பேட்டியில் ஆதங்கத்துடன் தெரிவித்திருப்பார். அதன்பிறகு, செல்வராகவன் - ஜி.வி., கூட்டணியில் ‘மயக்கம் என்ன’ படம் வெளியாகி பாடல், பின்னணி இசையில் நல்ல வரவேற்பை பெற்றது.
After Aayirathil oruvan and Mayakkam enna ….. A new beginning … #AayirathilOruvan #MayakkamEnna @selvaraghavan …. A new journey starts today ….. pic.twitter.com/cYvQiC2eUy
— G.V.Prakash Kumar (@gvprakash) September 16, 2024
ஆயிரத்தில் ஒருவன் - 2
இந்த நிலையில், மீண்டும் செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி புதிய படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதனை, ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைய உள்ளதாக ஜி.வி.பிரகாஷ் குமார் மகிழ்ச்சியுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், இது எந்த படம் என்று தெரிவிக்கவில்லை. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகமா? அல்லது வேறு ஏதேனும் படமா என்று பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இருப்பினும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.