மேலும் அறிய
Advertisement
கிராமி விருதுக்கு தேர்வான பிரதமர் எழுதிய பாடல்! சினிமாவிலும் கலக்கும் மோடி!
’அபாண்டஸ் இன் மில்லட்ஸ்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி எழுதியுள்ள பாடல் கிராமி விருதுக்கு தேர்வாகியுள்ளது.
உலகளவில் சிறந்த சிசை, பாடல் மற்றும் இசையமைப்பாளர்களுக்கான கிராமி விருதுக்கு பிரதமர் மோடி எழுதி இருக்கும் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ள.
கிராமி விருது:
சர்வதேச அளவில் திரைத்துறையில் சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்கம், இசை, பாடல் தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் கீழ் ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இசை சார்ந்த பிரிவில் சர்வதேச அளவில் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதாக இந்த கிராமி விருது பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது எப்படியோ அதேபோல இசை கலைஞர்களுக்கான விருதாக கிராமி விருது பார்க்கப்படுகிறது. இது சிறந்த பாடல், ஆல்பம், கிராமத்து பாடல், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கிராமி விருதுக்கு பிரதமர் மோடி எழுந்திய பாடல் ஒன்று தேர்வாகியுள்ளது.
பிரதமர் மோடி எழுதிய பாடல்:
’அபாண்டஸ் இன் மில்லட்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள பாடல் வரிகளை பிரதமர் மோடி எழுதியுள்ளார். சிறுதானியங்களின் முக்கியத்துவத்தையும், விவசாயத்தையும், ஆரோக்கியத்தையும் கூறும் விதமாக உருவான பாடலில் பிரதமர் மோடியின் உரையும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், நடைபெறும் 66வது கிராமி விருதுக்கு பிரதமரின் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உலகளாவிய சிறுதானியங்கள் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடியின் உரை பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை பிரதமர் மோடியுடன் இணைந்து இந்திய அமெரிக்க பாடகி ஃபாலு, அவரது கணவர் கவுரவ் ஷா ஆகியோர் இசையமைத்து பாடியுள்ளார்.
The video for our single "Abundance in Millets" is out now. A song written and performed with honorable Prime Minister @narendramodi to help farmers grow millets and help end world hunger. @UN declared this year as The International Year of Millets! pic.twitter.com/wKXThL2R5Z
— Falu (@FaluMusic) June 28, 2023
இது தொடர்பாக பேசிய பாடகி ஃபாலு, கடந்த ஆண்டு டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போது தினை பற்றிய பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும், பாடல் உருவாக்கத்துக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Lal Salaam Teaser: தீபாவளிக்கு வாழ்த்த வரும் மொய்தீன் பாய்.. சரவெடியாக வெளியாகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion