மேலும் அறிய

GP Muthu: எங்க அம்மாவுக்கு அப்புறம் விஜயகாந்த் தான்.. நினைவிடத்தில் ஜிபி முத்து கண்ணீர் மல்க அஞ்சலி

விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தினமும் பொதுமக்களும் , பிரபலங்களும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

 கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி  நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்தி  ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜயகாந்த் இல்லை என்பதை இன்னும் பலராலும் ஏற்றுக்கொள்ளாத முடியாததாகவே உள்ளது. இதனிடையே விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்து அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தினமும் பொதுமக்களும் , இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்களும் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும் வெறிச்சோடி காணப்படும் தேமுதிக அலுவலகம் விஜயகாந்த் மீதான் அன்பால் கூடிய மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. 

View this post on Instagram
 
A post shared by GPMuthu 24 🔘 (@1gpmuthu)

இந்நிலையில் தான் பிரபல யூட்யூபர் ஜி.பி.முத்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயகாந்த் நினைவிடத்தில் நான் மரியாதை செலுத்த ஒருவார காலமாக நினைத்து கொண்டிருந்தேன். விஜயகாந்த் மறைந்த அன்றைக்கு எங்க ஊரில் நல்ல மழை பெய்ததால் என்னால் வர முடியவில்லை. அதனால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்றைக்கு வந்தேன். விஜயகாந்த் ஐயா உயிரோடு இருந்தபோது அவரை பார்க்க ஆசைப்பட்டு வாடகை காரில் வீடு வரை வந்தேன். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. விஜயகாந்த் போல பசியோடு இருப்பவர்களுக்கு முடிந்தவரை சாப்பாடு போடுங்கள். முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். அவரது மறைவு ரொம்ப சங்கடமா இருக்கு. 

மேலும்  விஜயகாந்த நடித்த சின்ன கவுண்டர், வானத்தைப் போல படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மாவுக்கு பிறகு கேப்டன் மறைவுக்கு தான் நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் ரொம்ப கஷ்டப்பட்டவன் என்பதால் தானம், தர்மம் செய்பவர்களை மிகவும் மதிப்பேன். விஜயகாந்த் மறுபிறவி எடுத்து இதேபோல் செய்வார் என நம்புகிறேன். நானும் அவர் வழியில் உதவிகளை செய்வேன்” என தெரிவித்தார்.  

மேலும் படிக்க: Jayam Ravi: “நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் தான் சரி” - அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ஜெயம் ரவி பேச்சு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget