G.P Muthu : 175 தையல்.. உடம்பு முழுக்க கிழிக்கப்பட்ட ஜி.பி.முத்து.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்...
G.P Muthu : டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
G.P Muthu : டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
ஜி.பி. முத்து
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த பிரபல யூட்யூபரான ஜிபி முத்து தான் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் பிரபலமானார். இந்த பிரபலம் அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி வந்த ஜிபிமுத்துக்கு பிக்பாஸ் சீசன் 6 யில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து முதல் ஆளாக உள்ளே சென்ற ஜிபிமுத்து, மகனை பார்க்க முடியாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்று கூறி, முதல் ஆளாக வெளியேவும் வந்து விட்டார். வெளியே வந்த மகன் நன்றாக இருப்பதாக வீடியோ வெளியிட்ட அவர், சினிமா படங்கள் நடிப்பது மட்டுமல்லாது தனியார் கடைகளையும் திறந்து வைத்து வருகிறார்.
அண்ணன் தம்பி சண்டை
இந்நிலையில், அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, " நான் 3ம் வகுப்பு வரைக்கும் தான் படித்திருக்கிறேன். பெரிதாக எதுவும் படிக்கவில்லை. மாதம் 30 ரூபாய் சம்பளத்தில் நகை பட்டறை கடையில் சுமார் இரண்டு ஆண்டு வேலை செய்தேன். பின்பு, வருடங்கள் போக போக ஒரு நாளைக்கு 300 ரூபாய் என்ற சம்பளத்தில் வேலை செய்தேன். பின்பு, சொந்தமாகவே ஒரு நகை பட்டறை கடையை தொடங்கினேன். பின்பு நானும் என் தம்பியும் தான் ஒன்றாக வேலை செய்தோம். ஆனால் என்னுடைய குணம் வேறு என்னுடைய தம்பி குணம் வேறு. அண்ணன் என்ற முறையில் நான் சொல்வதை எதுவும் என் தம்பி கேட்கமாட்டார். அதனால் எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். அப்படி ஒரு நாள் எனக்கு என் தம்பிக்கு பயங்கரமாக சண்டை ஏற்பட்டது. அப்போது என்னை தடுத்து நிறுவதுற்காக என் அம்மாவும் என் தங்கையும் பிடித்துக் கொண்டனர்" என்று கூறினார்.
175 தையல்
”இதனால் கோபடைந்த என் தம்பி கையில் வைத்திருந்த பிளேட் மூலம் என்னை உடல் முழுவதும் வெட்டினார். பின்னர் என்ன கையில் பிசு பிசுவென்று இருக்கிறது என்று பார்த்தால் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இருந்தது. பின்பு என்னுடைய நண்பர் ஒருவர்தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மொத்தமாக எனக்கு கை, வயிறு என உடல் முழுவதும் 175 தையல்கள் போடப்பட்டது. ரொம்ப கஷ்டமாக இருக்கு அந்த வலி தாங்க முடியாமல் பல நாட்கள் அவதிப்பட்டேன். ஆனால் அந்த வலியெல்லாம் தாங்கி கொண்டு மீண்டு வந்துவிட்டேன்" என்றார்.
”தம்பி இறந்தது தாங்க முடியவில்லை"
"தற்போது என்னுடைய தம்பி இறந்துவிட்டார். இந்த காயங்களால் துண்டித்ததை விட என் தம்பி இறந்தது தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னதான் என்னை அவர் வெட்டினாலும் என் தம்பி இறந்ததும் நான் துடித்துவிட்டேன்" என்று ஜி.பி.முத்து கூறினார். பின்னர் அவருடைய குழந்தைகளை நான்தான் பார்த்து கொண்டு வருகிறேன் என ஜி.பி முத்து வருத்தத்துடன் பேசியுள்ளார்.