Manikandan Next Movie: காதலும் ஒரு போர் தான்... ‘குட் நைட்’ மணிகண்டனின் அடுத்த பட அப்டேட்.. கலக்கல் புகைப்படங்கள்!
குட் நைட் மணிகண்டனின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
காதலும் கடந்து போகும், காலா, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஏலே, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது மணிகண்டன் அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். இப்படத்தில் கெளரி ப்ரியா, நடிகர் கண்ணா ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிகண்டன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில் தனது புதிய படத்தின் முதற்கட்ட படபிடிப்பு நிறைவடைந்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மணிகண்டன், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
The war has just begun.#LoveIsWar, isn’t it ?
— Manikandan Kabali (@Manikabali87) August 24, 2023
Calling it the First Schedule wrap.
Directed by @Vyaaaas
A @RSeanRoldan musical !! pic.twitter.com/0nmmtNu0G0
விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடித்த படம் ‘குட் நைட்’ இதில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. குறட்டையை மையமாக வைத்து உருவான அழகான, உணர்வுபூர்வமான படம் குட் நைட் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான, ஜெய்பீம் திரைப்படத்தில் மணிகண்டன் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ராஜாக்கண்ணு கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். அவரின் நடிப்புத்திறமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் நடிகர் மணிகண்டன் மட்டும் அல்லாமல் மற்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர்களும் சிறப்பாக நடித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் தனது டிவிட்டர் பக்கத்தில் “தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் குறிப்பாக கடைசி விவசாயி படத்திற்கு வாழ்த்துகள். சரியான தேர்வு. ஆனால் ஜெய்பீம் படத்திற்கு ஏன் ஒரு விருது கூட வழங்கப்படவில்லை?” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் “சரியாக சொன்னீர்கள் சார். ஜெய் பீம் திரைப்படம் விருதுக்கு மிகவும் தகுதியானது” என்றும் மணிகண்டன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாகவும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க