மேலும் அறிய

Gana Bala Interview: பயமா ..எனக்கா.. நான்தான் ஜெயிக்கப் போறேன்.. அனல்பறக்கும் தேர்தல் களம்.. கான்ஃபிடன்ஸ் உச்சத்தில் கானா பாலா

2012 க்கு பிறகுதான் நான் அவரை சந்தித்தேன். நான் தேர்தலில் நின்று தோற்றேன் என்பது தெரியும். ஆனால் மிகப் பெரிய அளவில் அரசியல் பற்றி பேசிக்கொள்வதில்லை

சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள 72-வது வார்டில் பிரபல கானா பாடகரும், வழக்கறிஞருமான கானா பாலா என்ற பாலமுருகன்  சுயேச்சையாக களமிறங்குகிறார்.

கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு 4,000 ஓட்டுகளுக்கு மேல் பெற்றதாக சொல்லும் அவர் இம்முறை நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். பரபரவென்று தேர்தலுக்காக பணியாற்றிக்கொண்டிருந்தவரிடம் பேசினேன். 

Gana Bala Interview: பயமா ..எனக்கா.. நான்தான் ஜெயிக்கப் போறேன்.. அனல்பறக்கும் தேர்தல் களம்.. கான்ஃபிடன்ஸ் உச்சத்தில் கானா பாலா

அரசியல் அதிகாரம் கானா பாலாவுக்கு எவ்வளவு முக்கியம்? 

இந்தப்பகுதியோட வளர்ச்சிக்கு அது கண்டிப்பா தேவை.  நான் இங்க இல்லன்னா இதை பத்தி வருத்தப்படப்போறது இல்ல. நான் இதே மண்ணுல இருக்கேன். அதனால அது அவசியம். 

சுயேட்சையாக போட்டியிடுவதற்கு காரணம் என்ன? 

நான் சோசியல் வொர்க்கரா இருக்கேன். நான் ஏதோ ஒரு பாரம்பரிய கட்சியை சார்ந்து வரவில்லை. நான் யாரையும் எதிர்த்து போட்டியிட வில்லை. போட்டியில் கலந்துக்குறேன் அவ்வளவுதான். 

இதைத்தாண்டி நான் செய்வது பாட்டு தொழில். ஏதோ ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவாக இருந்தால் நான் எப்படி தொழில் செய்ய முடியும். நான் எல்லாவற்றுக்கும் பொதுவான ஆள். 

Gana Bala Interview: பயமா ..எனக்கா.. நான்தான் ஜெயிக்கப் போறேன்.. அனல்பறக்கும் தேர்தல் களம்.. கான்ஃபிடன்ஸ் உச்சத்தில் கானா பாலா

ஆளுங்கட்சியை தாண்டி உங்களால் ஜெயித்து விட முடியுமா? 

நீங்கள் கேட்கிற கேள்வி எனக்கு பொருந்தாது. காரணம் நான் அனைத்து கட்சிகாரர்களின் வீடுகளுக்கும் போறேன். அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து பார்க்கிறேன் . அப்படி பார்க்கும் போது நாம் ஏன் நமக்கென்று இப்படியான அணியை  திரட்ட கூடாது என்று நினைத்தேன். அதற்கான வேலைகளை செய்கிறேன். அதை செய்தாலே மக்கள் நம் பக்கம் வருவார்கள். 

சினிமாவில் இருந்து நீங்கள் ஏன் விலகுவதாக அறிவித்தீர்கள்? இப்போது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?  

ஒரு 3 வருஷம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் என்றுதான் வெளியே வந்தேன்.. பாலாவின் பாடல்களுக்கு ரெட் கார்டு கொடுத்து ஒன்றும் நான் வெளியே வரவில்லையே.. இன்னைக்கும் நான் எல்லா சங்கத்திலும் உறுப்பினரா இருக்கேன். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிவிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

பா.ரஞ்சித் உடன் இது குறித்து ஏதாவது பேசினேர்களா?  

2012 க்கு பிறகுதான் நான் அவரை சந்திச்சேன். நான் தேர்தலில் நின்று தோற்றேன் என்பது அவருக்கு  தெரியும். ஆனால் மிகப் பெரிய அளவில் அரசியல் பற்றி பேசிக்கொள்வதில்லை. 

உங்களை தோற்கடித்து விடுவார்கள் என்ற பயம் இருக்கிறதா?  

பயமெல்லாம் ஒன்றுமில்லை.. இங்கு மக்கள் நான்தான் ஜெயிக்கப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டார்கள்.  அதனால் நிச்சயம் நான் ஜெயிப்பேன்” என்றார்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget